புதன், 30 ஆகஸ்ட், 2017

மும்பை பெருமழை - உணர்த்தும் உண்மைகள்



உண்மை -1  :- ஒவ்வரு  பெருமழையும் அது  அமெரிக்காவின்  ஹூஸ்டன்  நகராகட்டும் , இந்தியாவில்  மும்பை , சென்னை  போன்ற  நகரங்களாகட்டும் , என்னத்தான்  அறிவியல் , முன்னேற்றம்  என்று  பெருமை  கொண்டாலும்  இயற்கைக்கு  முன்பு  இன்றும்  மனிதன்  மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை  உணர்த்துகிறது .

உண்மை-2    ஓலா ,உபேர்  போன்ற  நிறுவனங்களில்  நிறைய  பகுதி  நேரம் மற்றும்  தொழில் முறை  இல்லாத  ஓட்டுனர்கள்   உள்ளனர். இது  போன்ற  பேரிடர்  சமயங்களில்  கைவிட்டு  விடுகிறன்றனர். வாடகையும் 3 மடங்கு  முதல்  10 மடங்கு  உயருகிறது . அப்போது  கை கொடுத்தவர்கள் கருப்பு , மஞ்சள் (காலா,பில்லி ) டாக்ஸி  வாகனங்களும் , ஓட்டுநர்களும்தான்..அரசனை  நம்பி  புருஷனை  கை விட்டது  போல் ஓலா , உபேர்  போன்ற  பெரு  நிறுவனங்களை  மட்டும்  நம்பி இவர்களை  முற்றிலும்  புறக்கணிக்காமல்  இவர்களின் (existence ) இருப்பையும்  உறுதி  செய்ய வேண்டும் .

உண்மை-4 :- எப்போதும்  விமர்சிக்கப்படும் மாநகர  பேருந்து  சேவை (BEST ) பெருமழையில் கைவிடவில்லை . கடுமையாக  பணியாற்றி ஓரளவு மக்களை வீட்டை  அடைய  செய்ததும்  இவர்கள் தான் . சில பேரிடர்  தருணங்களில்  அரசு  சேவை என்பது  கைவிடாது என்பதை  மனதில் பதித்தார்கள் .

உண்மை -5 :- கடும்மழையிலும் அசுரத்தனமான  உழைப்பை  நல்கிய  மும்பை  காவல்துறையும் பாராட்டத்தக்கது. இவர்கள் இல்லாவிட்டால் இன்னும் நிலைமை  மோசமாக  ஆகி  இருக்கும்.

உண்மை-6 :- KFC ,PIZAA  HUT ,MCdonalds போன்ற   ஒரு  துளி உணவை கூட தரவில்லை. ஆனால்  தெருவோர  வியாபாரிகள் வடபாவ் , இட்லி போன்றவற்றை இலவசமாக  தந்தனர் ..

உண்மை-7 :- ஹூஸ்டன்  போன்ற  முன்னேறிய  நாடுகளில் பேரிடரை  பயன்படுத்தி  கொள்ளைபடிப்பதை தடுக்க இரவு  நேர  ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது என்ற  செய்தி  வந்தது.
 மும்பையில்  விமான  நிலையத்துக்கு  அருகில்  இருக்கும்  சேரி  பகுதிகள். பெரும்பாலான செல்வந்தர்கள்  மற்றும்  உயர்  நடுத்தர  மக்கள்   இந்த  சேரிகளினால் மும்பை  அழகு குறைகிறது  என்று வருத்தமும்  அடைவார்கள்.
 ஆனால்  மும்பை பெருமழையில் ,  விமான  நிலையம்  அருகில்  இருக்கும்  சாலைகளில் இவர்களின் வாகனங்கள் பல  மணி  நேர போக்குவரத்து  நெரிசலில் சிக்கி நகர முடியாத நிலையில்  இந்த   குடிசைவாசிகள் தான்  பிஸ்கட்  ,டீ போன்றவை  இலவசமாக  வழங்கி பசி ,தாகம்  தீர்த்தனர்.இது  வளர்ந்து  வரும்  நாடுகளின்  ஏழை மக்களின்  மனிதம்  இன்னும்  நீர்த்து  விடவில்லை  உணர்த்திக்கிறது.

இயற்கை பேரிடர்கள்  நம்மில்  உள்ள  மனிதத்தை உணர  வைக்கின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக