ஞாயிறு, 8 மே, 2016

விலை இல்லா பொருட்கள் உண்மையில் அவசியமற்றதா?



நானும்  விலை  இல்லா பொருட்கள் மக்கள் வரி பணத்தை வீணடிகிறார்கள் என்று நினைத்தேன்.. எனது நண்பர்  ஒருவர் மிகவும் பொருளாதார பின்னடைந்த பகுதியில் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறார்..அவர் எங்கள் பகுதியில் மாணவ,மாணவிகள் பெரும்பாலும் விலையில்லா சைக்கிள் மிகவும் பயனுள்ள தாக உள்ளதாகவும் , மாணவர்களுக்கு தரும் லேப் டாப் , தங்கள் பகுதி மாணவர்களும் நகரத்தின் மாணவர்களுக்கு இணையாக போட்டி  இட  முடிகிறது என்றும் கூறினார்..

GRINDER ,mixie  போன்றவை  மிகவும் வாங்க  இயலாத விட்டு பெண்கள் தங்களது வேலை பளுவை குறைக்க உதவு கிறது என்று  சொல்லு கிறார்கள்  ..இதை குறை கூறுபவர்கள் ஒரு  நாள்  தங்களுது மனைவியை  இவற்றை உபயோகிகாமல் இருந்து பார்க்க  சொல்லவும் ..

நாம்  லேப்டாப்  கேட்டால்  25,000 சொல்லும் கடைகள் , ஆனால்  அரசாங்கம்  மொத்தமாக  வாங்கும்  பொழுது  10,000 ரூபாய்க்கு  வாங்க  முடிகிறது ..இதனால்  பெரும்  பயன்  இல்லாதவர்கள் அடைகிறார்கள் .

மதிய தர மக்கள்  மன  நிலை நமக்கு மேல் உள்ளவர்கள் எவ்ளோ கொள்ளை யடித்து  சென்றாலும் கோபம் வருவதிலை ஆனால்  நமக்கு கீழ் உள்ளவர்கள் சிறிது இலவசமாக பெற்றால் கடும் கோபம் அடைகிறோம்... உதாரணமாக மொத்தமாக  இலவசமாக கொடுத்த பொருட்களின் மதிப்பு 10,000 கோடி ஆனால் பெரும் பணக்காரர்கள்  தள்ளுபடி செய்யபட்ட கடன் தொகை மட்டும் 2 லட்சம் கோடிக்கும் மேல்.. இலவசத்தில் பலன் பெற்றவர்கள் உண்மையில் வழியில்லாத பல லட்சம்  பேர் , ஆனால்  தள்ளுபடி செய்ய பட்ட கடனில் பயன்  பெற்றவர்கள் சில நூறு பேர் மட்டும்

அரசாங்கம் சிறிது முயற்சி செய்து உண்மையில் பயன் உள்ளவர்களுக்கு மட்டுமே  தர வேண்டும்,
சமுக பொறுப்புள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கு இலவசம் வேண்டாம் என்றும் சொல்லலாம் எனவே
 நியாயமானவர்க ளுக்கு சென்றடையும்..
 இன்று இலவசமே  வேண்டாம் என்று கூப்பாடு போடும் பத்திரிக்கைகள் தான் தங்களது பத்திரிக்கையோடு சோப்பு இலவசம், சாம்பு இலவசம் என்று ஆரம்பித்து வைத்தது என்பதையும் மறந்து விட வேண்டாம்



சனி, 7 மே, 2016

கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்


கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்
அ ண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை. அரசே  தாது மணல் விற்பனையை முறைப்படுத்தும்  ஏறத்தாழ முவாயிரம் கோடி ஆண்டுக்கு வருமாணம் வரும் முடிவு. 
இதனால் தொலைகாட்சி நிறுவனர் நேரிடையாக பாதிக்கபடுவார்.. இப்பொழுது தெரிகிறதா ஏன் கொந்தளித்து வருகிறது கருத்து கணிப்பு...
இதில் அந்த பத்திரிக்கை எப்படி சேர்ந்தது , அந்த பத்திரிக்கையின் தலைநகர பதிப்பின் வெற்றி பெயர் கொண்ட தலைமை நிருபர், தமிழக திமுக பெண் எம்பியின் உத்தரவின்படி இந்த கூட்டணியை அமைத்தார்...
இந்த புதிய அடிமைகளின் ஆட்டத்தை பார்த்த மாறன் சகோதரர்களின் நிரந்தர அடிமை பத்திரிக்கை  துள்ளி குதித்து மெகா கருத்து கணிப்பு என்று வந்து விட்டார்..
2011 ல் 90 இடங்களை மட்டுமே அதிமுக அணிக்கு கருத்து கணிப்பில் கொடுத்து கரி அள்ளி பூசி கொண்டு, 2014 கருத்து கணிப்பில் திமுக வுக்கு 14 இடங்களும் , பாஜகவுக்கு 11 இடமும் அள்ளி கொடுத்து அசிங்கபட்டு..
நாளையும் கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு 140 முதல் 160 இடங்களும்,
அதிமுக அணிக்கு 50 முதல் 70 இடங்களும், மற்ற அனைவருக்கும் ஒற்றை படையில் சீட் தர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது
இந்த எண்கள் அனைத்தும் மக்களிடம் கேட்டு எடுப்பதல்ல... அவர் கள் அலுவலகத்தின் மேஜையில் குருமா நிருபரும், விஷ்ணு பெயர் கொண்ட நிருபரும் முடிவு செய்வது.
2014 அனைத்து பத்திரிக்கை கணிப்பையும் மீறியே ஜெயித்தது (புகைப்படத்தை பார்க்க)


தமிழக மீடியாவில் சிலர் தங்களால் ஆட்சியை மாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு முயற்ச்சி செய்து பார்கிறார்கள்
களத்தில் உள்ள தொண்டர்களும், பொது மக்களும் குழப்பம் அடைய மாட்டார்கள்.
முடிந்த அளவு ஷேர் செய்யவும்

வெள்ளி, 6 மே, 2016

கருத்து கணிப்பும், சதுரங்க வேட்டையும்


நியூஸ் 7 தினமலர் கருத்து கணிப்பு :-சென்னை மண்டலத்தில் அதிமுக 14 தொகுதியில் வெற்றி  பெறும்

சதுரங்க வேட்டை எந்த ஒரு பொய் சொன்னாலும் அதில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் பார்த்து கொள்ள வேண்டும்


தேர்தல் அறிக்கை . ஆட்சியில் இருந்த பொழுது ஏன் செய்யவில்லை

அ தி மு க வின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்டது.. பல நீண்ட கால திட்டங்கள் Like மின்சார தன்னிறைவு, நதி நீர் மேம்பாடு போன்றவை கூறிப்பிட தக்கது மேலும் பல சிறப்புகள் உள்ளன. -
ஆளும் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடும் பொழது சிலர் இதை ஆட்சியில் இருக்கும் பொழுது ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள் .

அரசாங்கங்கள் 5 ஆண்டு திட்டம் போன்று, ஆண்டு தோறும் வெளியிடும் நிதி நிலை அறிக்கை போன்று, அடுத்த 5 ஆண்டு காண திட்டம் தான் தேர்தல் அறிக்கையாக வெளியீடப் பட்டுள்ளது.

முதலில் நடந்து சென்றவன் , சைக்கிள் வாங்குவான், பிறகு சில வருடங்கள் கழித்து மோட்டார் சைக்கிள், மேலும் சில வருடங்கள் கழித்து கார் வாங்குவான் அவனிடம் முதல்ல ஏன் கார் வாங்கவில்லை என்று கேட்பது போல் உள்ளது .முன்னேற்றம் படி படியாக தான் அமையும

வியாழன், 5 மே, 2016

தனி ஒருவன் வசனமும், தமிழக அரசியல் உதாரணமும்

ஜெயம் ரவி தனி ஒருவன் ல ஒரு வசனம் பேசுவார்.. திடீர்ன்னு முதல் பக்கத்துல உள்ள செய்திக்கும் மூணாம் பக்கத்துல உள்ள செய்திக்கும் உள்ள சம்பந்தம் புரிய ஆரம்பித்து விட்டது என்பார்
அது போல நீயூஸ் 7 கருத்து கணிப்புக்கும் அது நடுவுல வர்ற மனிதன் பட விளம்பரத்துக்கும்,
சன் டீவில விகடன் வழங்கும் தெய்வமகள் பாத்துக்கிட்டு ஜுனியர் விகடன் வர்ர செய்திக்கும்,
தமிழ் Oneindia Editor 1 வருடம் முன்பு கலைஞரை நேரில் பார்த்ததுக்கும் அதற்கு பிறகு வர்ர செய்திக்கும்
உள்ள சம்பந்தம் புரிய ஆரம்பிக்குது

புதன், 4 மே, 2016

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்
உள்ளுர் கவுன்சிலர் தேர்தல் பத்தியே கவலை  படாத நாம்  ஏன் அமெரிக்க அதிபர் தேர்தல் பத்தி கவலை பட வேனும் நினைச்சாலும்  நம்ம கவுன் சிலர் நல்லா இல்லாட்டி நம்ம தெரு தான் நாறும்.. அமெரிக்க அதிபர் சரியா இல் லாட்டி உலகமே நாறிடும்...
அது  இல்லாம இன்னைக்கு நாம பாக்குற வேலை   நாளைக்கு நிலைக்குமா இல்லையாங்குறதும் இந்த பதவியில் இருப்பவரின் செயல்பாடுகளும் முடிவு செய்யும்.

டொனல்ட் trump பெரும் பணக்காரர்.. அவரது  கட்சியின் சார்பில் அவரது வேட்பு மனு ஏறதாழ உறுதியாகி விட்டது .
இவரது பேச்சுகள் மிகவும் அதிரடியாக விஜயகாந்தை விட மோசமாக சீமான்  போல் உள்ளது .
ஒரு நாள் இந்திய மென்பொருள் நிறுவனங்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்றும், மறுநாள் முஸ்லிம்களை உள்ளே விட கூடாது என்றும், இன்னொரு நாள்  சீனாவின் வர்தகத்கத்தை அழிக்க வேண்டும் என்று கூறி பயம் ஏற்படுத்துகிறார் .

இவரு கடைசியில் ஜெயிப்பாரா?   ஜெயித்து அதிபர் பதவியில் அமர்ந்தால் பெரிதாக எதுவும் செய்யாமல் சும்மா விடுவாரா ?   எதாவது ஒரு நாட்டோட சண்டை போடுவாரா ? IT  ஆளுங்கள ஊருக்கு அனுப்பு வாரா?     எல்லாம் கடவுள் தான் அறிவார்

திங்கள், 2 மே, 2016

வளர்ச்சி கதையின் முடிவு சோகமா? இல்லை சந்தோஷமா

வளர்ச்சி

நண்பர் ஒருவர் கூறியது

எனது தாத்தா கிராமத்தில் நிலம் வைத்து மிராசுதாராக இருந்தார்... என் தந்தை அரசு வேலை தேடி கொண்டு தனது சம்பாத்தியத்தை கொண்டு தஞ்சை நகரில் வீடு கட்டி குடியேறினார்.. என்னை படிக்க வைத்தார்.. நான் தகவல் தொழில் நுட்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு சென்னையில் வீடு கட்டி குடியேறி விட்டேன்.. எனது மகன் நாளை வெளிநாட்டில் வேலை தேடி கொண்டு வெளிநாட்டில் குடியேறுவான்.. வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொரு கட்டமாக கிராமத்தில் இருந்து சிறு நகரம், பிறகு பெருநகரம், வெளிநாடு என்று குடியேறுகிறோம்....
நமது வருமானத்தில் பெரும் பகுதியை நாம் வாழும் இடத்தில் வீடு வாங்குவதற்கே செலவிடுகிறோம்.
இந்த  பொருளதார வளர்ச்சி என்னும் சக்கரத்தில் சிக்கி என் தந்தை என் தாத்தாவையும், நான் என் தந்தையையும் பிரிந்து தனியாக வாழ்ந்தார்கள், நாளை எனது மகன் என்னையும் விட்டு பிரிவான். ..
இத்தனைக்கும் காரணம் வேலை, சூழல் என்று சொன்னாலும் விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறியது தான்.

கடைசியாக சாப்பிடுவதற்கு மனிதன் இருக்கும் வரை, விவசாயம் அழியாது ஆனால் விவசாயி அழிந்து விடுவான்..
லாபம் வரும் எந்த தொழிலையும் செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்கள் கையில் விவசாயம் செல்லும்...
மிராசுதார்  என்று சொந்தமாக விவசாயம் செய்த இடத்தில் நாமே பெரிய நிறுவனத்தின் கூலி பணியாளராக வேலை செய்வோம்.. இது தான் இந்த வளர்ச்சி கதையின் முடிவு


இந்த வளர்ச்சி  கதையின் முடிவு சோகமா? இல்லை  சந்தோஷமா? குழப்பத்துடன் நான்