செவ்வாய், 4 அக்டோபர், 2016

காவிரி நீரும், கையாலாகாத மத்திய அரசும்

...

 கிராமத்தில் பரம்பரை சொத்தை  பங்கு பிரிக்கும் பொழுது வீம்பு பிடித்த  போக்கிரி சகோதரன் "உரிமைன்னு கேட்டின்னா ஒன்னும் தர முடியாது, வேனும்னா  என்னுட்ட வந்து கெஞ்சி கேளு நானா பாத்து போனா போகுதுன்னு எதாவது தருவேன்ன்னு " சொல்றான் .. பஞ்சாயத்துக்கு ஊர் பெரிய மனிதர்களிடம் சாதுவான மற்றொரு சகோதரன் போனா, ஊர் பெரியவர்கள் போக்கிரி சகோதரனுக்கு பயந்து " அவன் தான் நீ கெஞ்சி கேட்டா பரிதாபபட்டு எதாவது தருகிறேன்னு  சொல்றான்ல பேசாம நீ அவனிடமே போய் கெஞ்சு என்று அறிவுரை வழங்கினார்கள்... அதுதான் காவிரி பிரச்சனையில் தற்பொழது நடத்து கொண்டு இருக்கிறது கர்நாடக அரசியல்வாதிகளின் போக்கிரி தனத்திற்கு கையாலாகாத மத்திய அரசும் துணை போய் மீண்டும் தமிழகத்தை பேச்சு வார்த்தை பிச்சை எடுக்க சொல்கிறது  . . பேச்சுவார்த்தைக்கு  திரும்ப போனா மைசூர் பாக்கும்,மைசூர் போண்டாவும் வேணா கிடைக்கும் காவிரி நீர் கிடைக்காது...

புதன், 28 செப்டம்பர், 2016

டிவியும்,நானும் - 30 ஆண்டு கால பயணம்


இப்போது  ஜியோ மொபைல் 4ஜியில் 200க்கும் மேற்பட்ட  சேனல் களை பார்க்கும் பொழுது, 30 ஆண்டுகளுக்கு முன்பு டிவி நமக்கு  எவ்வளவு  ஒரு பெரிய விஷயமாக இருந்தது என்று யோசித்தபோது,


                                        Image result for 80s tv
                                                     


இந்தியாவில் டிவி  65களில் தொடங்கியதாக  சொல்லப்பட்டாலும், எங்கள் ஊருக்கு எல்லாம்  டிவி வர ஆரம்பித்தது 80களின்                            முற்பகுதியில் தான். முதன்  முதலாக நான் டிவியை  பார்த்தது  இந்திரா  காந்தி  சுட்டு  கொல்லபட்ட போது,  அவரது  இறுதி  சடங்கு  நிகழ்ச்சியை ஒளிபரப்பிய போது , ஊரில் உள்ள டாக்டர் ஒருவர் வீட்டில்  கண்ணீரும்  கம்பலையுமாக பார்த்தேன்.
 அப்போது  பெரும்பாலும்  கருப்பு  வெள்ளை  டிவிகள்தான்  இன்று  ஐ  போன்7 வைத்து  இருப்பது  போல  கலர் டிவி வைத்து  இருப்பவர்கள்  கருதபட்டனர். பள்ளிகளில்  டிவி  உள்ள வீட்டு  பிள்ளைகள்  பணக்கார வீட்டுபிள்ளைகள் ,டிவி இல்லாத வீட்டு பிள்ளைகள்  ஏழை இதுதான் 80களின் இறுதி வரை. டிவி ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்  .

டிவி கள் மின்சாரத்தை மிகஅதிகமாக இழுக்கும்  என்று கிராமத்து  வீடுகளில்இருந்தவர்கள் நம்பினார்கள்.  அதற்காகவே வெள்ளி  ஒளியும்,ஒலியும் நிகழ்ச்சிக்கு 50 காசும் , ஞாயிறு திரை படத்துக்கு  ஒரு  ரூபாயும்  பக்கத்து  வீட்டு குழந்தைகளிடம் வாங்கும் பழக்கமும்  ஒரு  சிலர் வீட்டில்  இருந்தது.அதே போல்  தொடர்ந்து  டிவி ஓடினால் ரிப்பேர் ஆகி விடும்  இன்று  2 மணி நேரத்துக்கு ஒரு முறை  நிறுத்தி  விசிறி  விட்டவர்களும்  இருந்தனர்.

அப்பறம்  அந்த  டிவி யை  பூட்ட  ஒரு  பெட்டி , இருந்தது ஒரு சேனல் , அதிலும்  முக்கால் வாசி  நேரம் ஹிந்தி  தான் . ஆனாலும் புள்ளைங்க டிவி நெறைய பாக்குது என்று  சொல்லி  பூட்டி  வைத்தனர் .  உண்மையில் அந்த பெட்டியும்   ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல.


BCCI இன்று  உலகின்பணக்கார விளையாட்டு அமைப்பாக  இருக்க  காரணம்  இந்த  டிவி பெட்டிதான் ..தூர்தர்ஷன்ல் நேரடி  ஒளிபரப்பு  பார்க்க  மன தைரியமும், கடவுள் அருளும்   வேண்டும் கடைசி ஓவர்  இருக்கும் போது தடங்கலுக்கு வருந்துவார்கள், அதுவும் இல்லாட்டி ,  இவர்கள்  செய்தி  வாசிக்காவிட்டால்  உலகம்  அழிந்து  விடுவது  மாதிரி போட்டியை ஒளிபரப்பாமல் வரதராஜனும், பாத்திமா பாபுவும் வந்து உயிரை  எடுப்பார்கள்.

டிவி பார்பதற்க்காகவே ஹிந்தி  கற்று  கொண்ட பெண்கள்  எங்கள்  உறவுகளில்  இருந்தனர். அவர்கள்தான்  சனி கிழமை  ஹிந்தி படங்களுக்கும் ,ராமாயணம் ,மஹாபாரதம் தொடருக்கும்  எங்களது மொழி  பெயர்ப்பாளர்கள். எனக்கு  அமிதாப்பச்சனை  தவிர  ராஜேஷ்  கண்ணா ,சசி கபூர்,ஷம்மி  போன்ற   ஹிந்தி  ஹீரோக்களும் ஒரே  மாதிரிதான்  தெரிந்தார்கள்.  ஞாயிறு மதியம்  விருது பெற்ற மாநில  மொழி  திரைப்படங்களில் தமிழ் மொழி வருவது ஜாக்பாட்  அடித்த  சந்தோஷம் .

Solidaire ,Dynora ,Onida போன்றவைதான்  மிக சிறந்த  டிவி பிராண்ட் . அதிலும்  மைக்ரோசாப்ட் மாதிரி solidaire   தான் .  ஒனிடா  மொட்டை  தலையன் கொஞ்சம்   ரொம்ப  பிரபலம்  ஆனான் . அப்றம்  கலர்  டிவி நிறைய  வர ஆரம்பித்த போது BPL,Videocon போன்றவையும்  பிரபலம்  ஆனது .

வாங்குனா கலர்  டிவி தான் வாங்கணும்  சொன்ன எங்க அப்பாவும் கடைசியில் 92இல்  ஒரு  கலர்  டிவி வாங்கி தந்தார்.  அன்றைக்கு  நாங்கள் அடைந்த  சந்தோசத்தின் அளவு, இன்றைக்கு எனக்கு  ஒரு கோடி  ரூபாயை  கையில் குடுத்தால் வருமா என்று  தெரியவில்லை. அந்த  டிவியும்  சச்சின்  டெண்டுல்கர் போல்  20 ஆண்டுகள் வேலை செய்து 2012ல்  தான் ரிட்டையர் ஆனது ஆனா போன வருஷம் வாங்குன ஸ்மார்ட் டிவி  இப்போ டிஸ்பிலே சரியா தெரிய மாட்டேங்குது.

அப்றம்  கேபிள் டிவி , சன் டிவி என பல  ஆச்சரியங்கள்  அப்றம்  ஆச்சர்யங்கள்  எல்லாம்   பழகி விட்டது  .

ஆனாலும் சின்ன  வயதில்  ஆச்சர்யத்தை  தந்ததாலோ என்னவோ இப்போதும் சில சமயம்  டிவி  நம்மை  மெய் மறந்து   பார்க்க வைத்து  மனைவியிடம் திட்டு  வாங்க  வைத்து விடுகிறது.










வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இந்தி எதிர்ப்பு மொழிப் போர் .. சில நினைவுகள்

இந்திய அரசியலமைப்பு மன்றம் திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான “தேசியமொழி” போன்ற விஷயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன. ஒரு பக்கம் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி. துலேகர், பாலகிருஷ்ண சர்மா, புருசோத்தம் தாஸ் டாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல இந்தி ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.[30][31] 10 திசம்பர் 1946 அன்று துலேகர் "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினார்.

நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய உத்திரப் பிரதேச நண்பர்கள் தங்களது கூடுதலான "இந்தி ஏகாதிபத்திய" நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது உத்திரப் பிரதேச நண்பர்கள் ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா, இந்தி-இந்தியா வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது என்று பதிலுரைத்தார் TT கிருஷ்ணமாச்சாரி

நன்றி வீக்கிபிடியா தமிழ்

திங்கள், 12 செப்டம்பர், 2016

காவிரியின் பெயரில் வன்முறை... யார் காரணம்?

காவிரி போராட்ட வன்முறையில் ஈடுபடும் யாரையும் பார்த்தால்  விவசாயி மாதிரி தெரியவில்லை.. ஊருக்கு சோறு போடும் விவசாயியின் கை  அடுத்தவர் உடமைகைளை சூறையாடாது,  இந்திய விவசாயி விவசாயம்  பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டு உள்ளான் ஆனால் கொள்ளையடித்ததில்லை.. அப்படி செய்து இருந்தால் இந்த தேசமே வன்முறை காடாகி இருக்கும்.  

பேச்சுவார்த்தை மூலம் தண்ணீர் பெற்று இருந்தால் வன்முறை இருந்து இருக்காது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். பேச்சு வார்த்தை தோற்று தானே தமிழகம் நீதிமன்றத்தை நாட வேண்டி வந்தது.
தமிழ்நாடு அணை கட்டவில்லை என்ற குற்றசாட்டும் தவறானது. தமிழகத்தின் புவியியல் அமைப்பின் படி பெரும் அணைகள்   கட்ட முடியாது ஒரளவு தடுப்பணைகள் தான் கட்ட முடியும் அதுவும்  இரண்டு கழக ஆட்சியிலும் கட்டுப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையே நிரம்பாத போது மேலும் பெரிய அணை கட்டி என்ன பயண்?
மணல் அள்ளுகிறான், சாய பட்டறை கழிவு குற்றசாட்டு , தவறு தான், ஆனால்  இது எதுவும் நீரை பகிர்ந்து கொள்ள மறுப்பதற்கு காரணம் ஆகாது.,

இன்று டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இளைஞர்கள் வெளியேறி விட்டனர் , பெங்களுர், சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர் முதல் வளைகுடா நாடு வரை வேலை செய்வது எனது டெல்டா மாவட்ட தம்பிகள் தானே. ஏக்கருக்கு 3 லட்சம் வருமானம் வரும் என்ற நிலை  இருந்தால் இவர்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக போகிறார்கள்,  முன்னேறிய நாடுகளை மிக குறைந்த தண்ணீரை பயன் படுத்தி விவசாயம் , நிலத்தடி நீர் மேம்பாடு, நெல் இல்லாமல் பிற பயிர்கள் இவையே நமக்கு உள்ள வாய்ப்புகள் .  இதற்கான அரசு நிதி ஒதுக்கீடு, விவசாய துறை அதிகாரிகளின் பெரும் முயற்சி இரண்டும் தேவை.
 நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முயற்சிக்கும் அதே வேளையில் இதையும் நாம் செய்ய வேண்டும் .

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

அடுத்த தலைமுறைக்கு புரட்சி தலைவர் பாடல்களை அறிமுகபடுத்துவோம்



70 களின் கடைசியில்  பிறந்த மற்றும் 80களில்  பிறந்தவர்களுக்கு  MGR  படங்கள் மற்றும் பாடல்கள், பெரும்பாலும்  அன்றைய  தொலைக்காட்சி , வானொலி  மற்றும்  பழைய  திரைப்படங்களை திரையிடும் திரை  அரங்குகள்  மூலம்   சேர்ந்து  விட்டது 

90 களின் பிற்பகுதியில்  பிறந்தவர்களுக்கு அந்த அளவு  சேர்ந்ததா  என்று  தெரிய வில்லை . 

நம்முடைய அடுத்த  தலைமுறைக்கு உட்க்கார்ந்து நல்ல  ஒழுக்கம்  நாம்  சொல்லி தர  முடியோமோ  இல்லையோ,.ஆனால்  புரட்சி  தலைவர் அவர்களின் நல்லொழுக்க, தன்னம்பிக்கை  பாடல்களை  அறிமுக  படுத்துங்கள் .

அவரது  அரசியலில்  கருத்து  வேறுபாடு உள்ளவர்கள்  கூட  அவரது  பாடல்களில் கருத்து வேறுபட  மாட்டார்கள் .

என்ன மாதிரியான பாடல்கள்  அவரால்( கவிஞர்கள், பாடகர்கள் , இசை அமைப்பாளர்கள்  பங்களிப்புடன் )  தர  முடிந்துள்ளது .

1, உன்னை  அறிந்தால் , நீ  உன்னை  அறிந்தால் ,உலகத்தில்  போராடலாம்..
2, என்ன  வளம் இல்லை  இந்த  திரு நாட்டில் , என் கையை ஏந்த வேண்டும்  அயல்  நாட்டில் .
3. அச்சம்  என்பது  மடமையடா , அஞ்சாமை  திராவிடர் உடமையடா 
4. பாவம்  என்னும்  கல்லறைக்கு  பல  வழி , என்றும்  தர்ம  தேவன் கோவிலுக்கு  ஒரு வழி  .
5. கண்ணை  நம்பாதே உன்னை  ஏமாற்றும் . அறிவை  நீ நம்பு.
உண்மை  எப்போதும்  தூங்குவதும்  இல்லை , பொய்மை  எப்போதும் 
ஓங்குவதும்  இல்லை .
6.நெஞ்சம்  உண்டு  , நேர்மை உண்டு  ஓடு  ராஜா , ஒரு நேரம் வரை  காத்து  இருந்து  பாரு ராஜா .
7.திருடாதே  பாப்பா  திருடாதே , திருடனாய்  பார்த்து  திருந்தா விட்டால்  திருட்டை  ஒழிக்க  முடியாது 
8.தூங்காதே  தம்பி  தூங்காதே ,, நல்ல  பொழுதை  எல்லாம்  தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன்   தானும் கெட்டார் .
9. நாளை  நமதே , இந்த  நாளும்  நமதே .
10.. நல்ல நல்ல  பிள்ளைகளை  நம்பி ..

இது  மாதிரி  பல  முத்தான பாடல்கள்.என்னால் முடிந்தவரை காரில்  செல்லும்பொழுதோ ,
 சில  சமயம்  வீட்டில் தொலைக்காட்சியில் பழைய பாடல்கள்  ஒலிக்க செய்து  எனது  மகனுக்கு  இந்த  பாடல்களையும் , படங்களையும் அறிமுகம்  செய்கின்றேன் ..

அடுத்த  தலைமுறைக்கு  புரட்சி  தலைவர்  பாடல்களை  அறிமுக படுத்துவோம் ... ஒரு  நல்ல  தலை முறையை உருவாக்குவோம் 

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

வாழ்வின் வெற்றிக்கு கல்வி மட்டும் போதுமா ?

ஏறத்தாழ 20 ஆண்டுகள்  தொடர்ப்பு  இல்லாமல்  இருந்த  பள்ளி  நண்பர்களை  மீண்டும்  சந்திக்க  நேர்ந்த  போது உணர்ந்த   சில விஷயங்கள் .

1. நல்ல கல்வி நிறைய  நண்பர்களின்  வாழ்வை  மேன்மையடைய  செய்துள்ளது .கல்விக்கான  மதிப்பு  என்றும்  உள்ளது .
(Education is  Important )
2. அதே  நேரத்தில்  மிகவும்  சிறப்பாக படித்த நண்பர்களை விட , ஓரளவு  நன்றாக  படித்து , நல்ல அணுகுமுறை (attitude ) மற்றும்  நல்ல  தகவல் தொடர்பு  திறன்   (communication skills ) உடையவர்கள்  வெற்றி  அடைகிறார்கள் .
( Attitude with communication skills are as important as education )

3. சமூக  பொருளாதார  மாற்றத்தை விரும்பிய பலர் , நாட்டை   மாற்றும்  முயற்சியை  கை  விட்டு  விட்டு நாட்டையே மாற்றி வெளி நாட்டில் குடியேறி  விடுகின்றனர் .
(people want to change the country in childhood, mostly change the country of living only)

4. பள்ளியில்   மிக  தைரியம்  ஆக  இருந்த பெண்கள்  பல பேர் இல்லத்தரசிகள் ஆகவும் ,  இருக்கும்  இடமே  தெரியாமல்  இருந்த பெண்கள் பலர் வேலைக்கும்  சென்று  கொண்டு உள்ளனர்.
(Exposure after school or Mens are behind the women career path )

5. யாருமே விளையாட்டையோ , அரசியலையோ தேர்வு  செய்ய  வில்லை . அப்பறம்  எங்க  ஒலிம்பிக்  பதக்கம் , அரசியல்  மாற்றம் எல்லாம் ?

6  விவசாயதின்  வீழ்ச்சி கிராம புற  பொருளாதாரத்தை  சீர்குலைத்து   விட்டது  , வேலை  வாய்ப்பு ,பொருளாதார  மேம்பாடு வேண்டுமானால்  நரகத்திற்கு சாரி நகரத்திற்கு  சென்றால் தான்  முடியும்  என்றாகி  விட்டது  வெகு  சில  நண்பர்களே  கிராமத்தில்  இருக்கின்றனர்

6. என்னை  பொருத்த வரை  எங்கோ சென்று  லட்சம் , கோடியில்  சம்பாதிக்கும் பொருளாதார  வெற்றியை  விட  சொந்த  ஊரில்  பெற்றோர்,உறவினர் , நண்பர்கள்   கூட இருந்து ஓரளவு சம்பாதிக்கும் ஒருவனே  வாழ்வில் வெற்றி  பெற்றவன்.



Lighter side

7. 16 ல்  அழுகாக  இருக்கும் பெண்கள் நிறைய  பேர் 36ல் அழுகாக  இருப்பதில்லை மற்றும் 16 ல்  சுமாராக இருந்தவர்கள்  36 ல் அழகாக  இருக்கின்றனர்.


8. பெரும் பாலான ஆண்  நண்பர்களுக்கு  முடி  கொட்டி விட்டது.. அதான்  டீவில  எர்வாமேட்டின், Rich Feel  விளம்பரம்  அவ்ளோ  வருதோ ....


கவிஞர் முத்துக்குமார் மறைவு சொல்லும் பாடங்கள்


கவிஞர்  முத்துக்குமார் மறைவு தமிழுக்கு  பேரிழப்பு ,கமலஹாசன்  ஸ்ரீ ராமுனுஜரை  பற்றி  சொல்லும் பொது மிக  நீண்ட  காலம் (120 ஆண்டுகள்)  வாழ்ந்ததன்  முலமாகவே  எதிரிகளை  வென்றவர்  என்று  குறிப்பிடுவார் ..

பல  ஆண்டுகள் தொடர்ந்து  தமிழில்  மிக அதிகமான பாடல்கள்  எழுதிய  சாதனைக்கு  சொந்தக்காரர் முத்து குமார். 1500 க்கும் மேற்பட்ட  பாடல்கள் , பல  புத்தகங்கள் ,இரண்டு  தேசிய  விருதுகள் . அவர்  60 ஆண்டுகள்  வாழ்ந்திருந்தால் கூட  இன்னும்  எத்தனை விருதுகள் , எத்தனை சாதனைகள்  செய்திருப்பார் ..பெரும்  காப்பியமாக  வாழ வேண்டிய வாழ்க்கையை சிறு  ஹைக்கூ கவிதையாக முடித்து  கொண்டார் .

நண்பர்களே , பணம்  சம்பாதிப்பதற்கோ , சாதனை  செய்வதற்கோ , உழையுங்கள் , ஆனல்  உங்கள்  உடல்  நலத்தில்  கவனம்  வையுங்கள் ..மரணம் இயற்கைதான் , ஆனால்  நீங்கள்  உங்கள்  உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் செய்யும்  உழைப்பு  உங்கள் உடலுக்கு  செய்யும்  துரோகம் மட்டும்  அல்ல , உங்கள்  திறமைக்கு  செய்யும் துரோகம்  கூட ..

இறந்தாலும்  உ ங்கள்  சாதனைகளை  உலகம்  பேசி  கொண்டு தான்   இருக்கும் , ஆனால் உங்கள் குடும்பத்திக்கான  இழப்பு  உங்கள்  சாதனையை  விட  மிக  பெரியது .