வியாழன், 10 ஆகஸ்ட், 2017

அதிமுக அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?


அதிமுக  அடுத்த  கட்ட  நகர்வுகள் என்ன

இப்போது  டெல்லி  கட்டளையின் படி தினகரனை வெளியேற்றி  விட்டார்கள் . அடுத்ததாக  சசிகலாவும்  நீக்கபடுவார்.  எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுவார்கள் விரைவில்  பன்னீர்செல்வம் அணியும்  இணையும் . இரட்டை  இலையை திரும்ப  தருவார்கள். அதுபோல்  மத்திய  அமைச்சரவையிலும்  இணைவார்கள்.

உள்ளாட்சி தேர்தலில்  இவர்களை  மிரட்டி  30- 40 %  இடங்களை பிஜேபி க்கு வாங்குவார்கள். நாடாளுமன்ற  தேர்தலில்  20 இடங்களை  பிஜேபி பெறுவார்கள்.  இரண்டு டாடா  ஏஸ்  வாகனத்தில்  தமிழ்நாடு பிஜேபி கட்சியினர்  மொத்தத்தையும் ஏற்றி விடலாம்  . அந்த  கட்சிக்கு  பாடுபட்டு  உழைத்து அதிமுக  தொண்டர்கள்  வெற்றி  பெற  செய்ய  வேண்டும்.அதிமுக   தொண்டர்கள்  உழைப்பில்  வெற்றி  பெற்றால் சரி  இல்லை  என்றால் , தாமரையில் கட்சியை  இணைக்கும்படி  வலியுறுத்துவார்கள் ... மிரட்டலுக்கு  பயந்து  ஒன்றான  இவர்கள் இன்னொரு  மிரட்டலுக்கு பயந்து கட்சியை  பிஜேபியுடன்  இணைத்து விடுவார்கள்.

  3 1/2 வருடம்  சம்பாதித்து  விடுவார்கள்  மற்றபடி   அடுத்த  முறை  கவுன்சிலர்  பதவி  தேர்தலில் நின்றால்  கூட  அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு  வெற்றி   கிடைக்காது.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஒரு கரைவேட்டியின் கடிதம்

  அன்புள்ள அதிமுக   தலைவர்களுக்கு ,

                  அண்ணா  திராவிட  முன்னேற்ற  கழக கரை  வேட்டி எழுதும்  கடிதம் .. என்னை  கட்டியவன்   லட்சத்தையும் , கோடியையும் எதிர் பார்ப்பவனோ, இல்லை  அமைச்சர் , சட்டமன்ற , பாராளுமன்ற  , உள்ளாட்சி  அதிகாரத்தை  அனுபவிக்க  நினைத்தவனோ  அல்ல , இவன்  கட்சியின்  கடைநிலை  தொண்டன். இவனுக்கு  நான்  ஒரு  அடையாளம் . கரை  வேட்டியை  கட்டி  விட்டால்  அவனுக்கு  மாற்று  கட்சியை சேர்ந்த  உறவினர்களோ ,நண்பர்களோ  இரண்டாம் பட்சம்தான்  .நான்தான்  பிரதானம் . எனக்காக  அனைவரிடமும் சண்டையிட தயாராகி  விடுவான். உள்ளூர் மக்கள் பணிக்காக கரை வேட்டியுடன் சட்டமன்ற ,ஒன்றிய  நிர்வாகிகளை  சந்திக்கும்  பொழுது தரும்  சிறு மரியாதைதான்  அவனது அங்கீகாரம்.

புரட்சி  தலைவரால்  ஈர்க்கப்பட்டு  இயக்கத்தில்  இணைந்து , தன் வாழ்க்கையை  இயக்கத்துக்காக  அர்பணித்தவன்  அவன்..புரட்சி தலைவர் மறைவின்போது   இரண்டாக  உடைந்த  போது கூட அவனுக்கு இயக்கம்  இணையும் என்ற ஒரு  நம்பிக்கை  இருந்தது. அவனது  நம்பிக்கை  பலித்து  புரட்சித்தலைவியால்   இயக்கம் அசுர  பலம்  அடைந்தது. தேர்தல்  தோல்விகள் எந்த  நாளும் அவனது  நம்பிக்கையை  பாதித்தது  இல்லை ..மீண்டு  வருவோம் என்று  தெரியும் ..

ஆனால்  இன்று  ஆட்சி  இருக்கிறது ... ஆனால் அவன்   நம்பிக்கை இழந்து  கொண்டு  இருக்கிறான்.. குரங்கிடம் அப்பம்  பிரிக்க சென்ற  பூனைகளின்  கதையாகி  கொண்டு  இருக்கிறது இன்றைய அதிமுக வின்  கதை ..உங்களின்  சகோதர  சண்டையை நீங்ள்  பேசி  தீர்த்து கொள்ளுங்கள் .. குரங்கிடம் சென்ற  அப்பம்  திரும்பி வராது  என்பதை  மனதில் வையுங்கள் .

இன்றும்  இயக்கம்  இரண்டாக  இருக்கலாம் , மூன்றாக  இருக்கலாம் , ஆனால்  கரை  வேட்டி  கட்டிய  தொண்டன்  வேறு எங்கும் செல்லவில்லை . 4 ஆண்டுக்கு  பிறகு  ஆட்சி  முடிந்து விடும். அதிகாரம் கையை  விட்டு  போய் விடும்  ,நீங்கள்  திரும்பி  பார்க்கும் பொழுது அங்கு தொண்டர்கள் இருக்கமாட்டார்கள். என்னை    கட்டிய தொண்டனை  வேறு ஒரு  வேட்டி  கட்ட  வைத்து  விடாதீர்கள் .

நீங்கள் ஒருவருக்கொருவர்  விட்டு  கொடுத்து விரைவில்  இணையுங்கள் , அப்போது  புரட்சி  தலைவர் , புரட்சி  தலைவியின்  காலத்தை  போல்  பெருமையுடன் கரை  வேட்டியை  கட்டி மக்கள்  பணிக்காக  தயாராக இருப்பான் என்னுடையவன் .

அன்புடன் ,

அதிமுகவின்  கரை வேட்டி ..



வியாழன், 3 ஆகஸ்ட், 2017

பாஜகவின் பலி கடாவா அதிமுக ?


பாஜக  இந்தியா  முழவதும்  தீண்டத்தகாத  கட்சியாக  இருந்த போது  பாஜக வை  கூட்டணியாக  இணைத்து  வெற்றி பெற்றது  சிவசேனா ..இன்று  சிவசேனாவிற்கே கொஞ்ச  கொஞ்சமாக  ஆப்பு  வைத்து  விட்டார்கள்   பாஜகவினர் .பாஜக  கூடாரத்தில்  புகுந்த  ஒட்டகம்  கொஞ்சம்  கொஞ்சமாக  உள்ளிருப்பவர்களை வெளிய  தள்ளி விடுவார்கள்.

பாஜக   அதிமுக இரு அணிகளையும்  இணைத்து  இரட்டை  இலையை  திரும்ப  தந்து  கூட்டணி வைத்து 2019 தேர்தலில்  வெற்றி  பெறலாம்  என  நினைக்கிறார்கள். அவர்களின்  ஆலோசனைப்படியே  நடந்தாலும் எப்படியும்  20 பாராளுமன்ற தொகுதிளை   மிரட்டி  வாங்குவார்கள் . பிறகு  சட்ட மன்ற  தேர்தலில் 80- 100 தொகுதிகள்  என்று கொஞ்சம்  கொஞ்சமாக  அதிமுகவை  தின்று தின்று  பாஜக வளரும் .

 சசிகலா குடும்பதிற்கு   ஒட்டு  விழாது  என்று  கழட்டி  விடலாம்  என்று  சொல்லும்   அமைச்சர்களே  , பாஜக   கூட  சேர்ந்து  மட்டும்  லட்சக்கணக்கில்  ஒட்டு  வாங்க முடியுமா?

  மாநில  அதிமுக  அரசை   பாஜக  தலைவர்கள்  தாறுமாறாக  விமர்சிக்கிறார்கள் ..ஆனால்  தவறி  கூட  மத்திய  அரசை விமர்சிக்க  பயப்படுகிறார்கள் . இந்த  நிலைமையில்  சென்றால் அதிமுகவை தமிழக  பாஜக  வளர்ச்சிக்கு  பலியிட தயாராக  இருக்கிறார்கள்.

இன்றைய  நிலையில்  தொண்டர்களையும் ,  ஓட்டுக்களையும்  தக்க    வைக்க வேண்டுமானால்  பாஜக  எதிர்ப்பு  நிலையே  எடுபடும் .




புதன், 2 ஆகஸ்ட், 2017

வாழ்க்கை மனிதர்களுக்கானது

அந்த  காலம்  தான்  எவ்வளவு  கடினமானது ...

விவசாயம் மட்டும்  தான்  பெரும்பாலானவருக்கு  தெரிந்த  தொழில் .அதுவும் பெரும்பாலும்  ஆட்களையே சார்ந்தது ..காலையில் வயலுக்கு சென்ற அப்பாவால் இரவில் தான் வீட்டுக்கு  வர  முடிந்தது , நடவு ,அறுவடை  என்றால்  மாதகணக்கில் உழைப்பு  தேவை பட்டது .

போக்குவரத்து  என்றால் பெரும்பாலும் பேருந்து  அல்லது  ரயில்தான் , நாளின்  பெரும்  பகுதியை  பேருந்துக்கு  காத்து  இருந்தே கழிந்தது .
 கார், மோட்டார் சைக்கிள் வெகு  சிலரிடம்  இருந்தது  அதுவும்  தினசரி பயன்பாட்டுக்கு அல்ல .. ..நீண்ட  தூரம்  என்றால் இரண்டாம் வகுப்பு ரயில் அல்லது திருவள்ளுவர்  பேருந்துகள்  மட்டும் . சொகுசு ஆம்னி பஸ்கள்  கிடையாது. விமானம்  என்றால்  மத்திய  தர குடும்பத்துக்கு கீழிருந்து பார்பதுக்கானது , பயணத்துக்கானது அல்ல.

புதிய  பாடலுக்காக ஒரு  வாரம் ஒளியும் ,ஒலியும் காத்து இருக்க  வேண்டும்.. ரஜினி , கமல்  பட டிக்கெட்  என்றால்  விடியற்காலை  திரை அரங்குக்கு  சென்றால்  மதிய கட்சிக்கான டிக்கெட் கிடைக்கும்.

தகவல் தொடர்பு  என்றால்  தந்தியும், landline தொலைபேசி யும்தான். வெளியூரில் இருந்தால் நெருங்கிய  உறவினர் இறப்பையும் இன்லேண்ட் லெட்டரில் தான்  தெரிந்து அழுதவர்  இருக்கின்றனர் .

பெரிய  அறுவை  சிகிச்சை  என்றால் அரசு மருத்துவமனையே கதி ..உங்களது  நோயை  விட  அரசு  மருத்துவமனை  அதிகமாக  பயமுறுத்தியது.
 எந்த ஊருக்கு  கிளம்பினாலும்  கட்டி சாதம் கையில்  எடுத்து போய்
கொண்டு  இருந்தோம். வாரம்  ஒருமுறை  ஹோட்டல்  எல்லாம்  கிடையாது .எப்போதாவது  அத்தி பூத்தாற்போல்  நிகழும்   நிகழ்வு .

புதிய  உடைகள்  தீபாவளிக்கு  மட்டுமே எடுக்க  முடிந்தது .
 கோடைகாலத்தில்  A/C கிடையாது . மின்சாரமும்  தொடர்ந்து  இருக்காது .
குடும்பத்தில் யாராவுது  ஒருத்தர் மட்டுமே  வேலை பார்த்ததால்   வருமானம்  குறைவு ...வாழ்க்கையில் எல்லாவற்றையும் பொறுத்து  கொண்டுதான் போய்  கொண்டு  இருந்தோம் ..

மொபைல்  கிடையாது , மால்  கிடையாது , இணையம்  கிடையாது facebook கிடையாது ,,இத்தனை  தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது

ஏகப்பட்ட  கிடையாதுகள் ..ஏகப்பட்ட வசதி குறைவுகள் , கடுமையான பொருளாதார  நெருக்கடிகள்  இத்தனையும் தாண்டி  என்  இன்றைய  மனிதன்  அந்த  காலம்  அழகானது  என்று சொல்கிறான் ..
ஏனென்றால்

மனிதர்கள் , மனிதர்கள் , மனிதர்கள் ..
அன்றைய உங்கள்  வாழ்க்கை நிறைய மனிதர்களால்  நிரம்பி  இருந்தது  ..நண்பர்களாக , உடன்  பிறந்தவர்களாக , உறவினர்களாக , பக்கத்து வீட்டுகாரர்களாக  நிறைய  மனிதர்கள் உங்களின்வாழ்க்கையில்  இருந்தனர் ,  சுக ,துக்கங்களில் பங்கெடுத்தார்கள் ..உரிமையுடன் உங்களிடம்  கோபித்து கொண்டார்கள்  , சண்டை போட்டார்கள் .. உங்களிடம்  அவர்களுக்கான  நேரமும்  இருந்தது .
நிறைய மனிதர்கள் , நிறைய  மகிழ்ச்சி , நிறைய  கண்ணீர் , நிறைய நிகழ்வுகள் ..நிறைவான  வாழ்க்கை ..

இன்று உங்களுக்கு  நேரமும்  இல்லை , உங்கள்  வாழ்க்கையில்  மனிதர்களும்  இல்லை ...

மனிதர்களை நேசியுங்கள் .வாழ்க்கையை மனிதர்களால் நிரப்புங்கள் .


LIVE IS BEAUTIFUL







செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை


பிக் பாஸ்  வீட்டில்  100 நாட்கள்  பல கேமெராகள் கண்காணிப்பில் , நடிக்க  முடியாமல் உண்மையான கேரக்டர் வெளிப்படுத்தி விடுகிறார்கள் ...
33 ஆண்டுகள்  ஒரே வீட்டில்   புரட்சி தலைவி  ஜெயலலிதா  போன்ற புத்திகூர்மையான, பல்வேறு  தரப்பு மக்களிடம்  பழகிய ,துரோகத்தை வென்ற,  பெண்மணியின் முன்  தொடர்ந்து  நடிக்க முடியுமா ? அங்கு  உண்மையான  நட்பும்  , அன்பும் , பாசமும் மட்டும்  இருந்ததால் தான்  திருமதி  சசிகலா  அவர்களால் நீடிக்க  முடிந்தது .

 
ஒரு  ராஜ்ய  சபா MP பதவிக்கு, 45 சட்ட  மன்ற  உறுப்பினர்களை  டெல்லியின் வியூகத்தில்  இருந்து  காப்பாற்ற  நூறாண்டு  கண்ட காங்கிரஸ் கட்சிக்கு நாக்கு  தள்ளுகிறது ..பிஹாரில்  இன்னும்  மோசமான  அடி ..... ஆனால்  டெல்லி யின் வியூகத்திற்கு  எதிராக ஒரு  மாநில  ஆட்சியையே  காப்பாற்றி  கொடுத்தவர்  சசிகலா .


இந்த  ஆட்சி  இருக்கட்டும் ,போகட்டும் , என்ன  வேண்டுமானால்  நடக்கட்டும் ..ஆனால்  அன்று டெல்லி வியூகத்தை  உடைத்து , ஜெயித்தவர்  அவர் அது  வரலாறு ..

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை .
 

புதன், 26 ஜூலை, 2017

நீட் ..சாதித்து இருக்குமா திமுக ?

நேற்றைய  புதிய  தலை முறை  நிகழ்ச்சியில்  நேர்பட பேசு  நிகழ்ச்சியில்  திமுக  சில  குற்றச்சாட்டுகளை  வைத்தது ..அதற்கான சில  விளக்கங்கள்

குற்றச்சாட்டு 1.  2011 க்கு  பிறகு  தமிழகத்தில்  கல்வி  தரம்  குறைந்து  உள்ளது . ... 2010 திமுக  அரசால்  சமசீர்  பாடதிட்டம்  அறிமுக  படுத்த  பட்டது ..அப்படியானால்  திமுக வால்  கொண்டு  வரப்பட்ட  சமசீர் கல்வி  முறை  தரமற்றது  என்கிறாரா  திமுக  உறுப்பினர் ..எந்த  ஒரு பாட  திட்டத்தையும்  சில  ஆண்டுகள் அமுல் படுத்தி  , அதன்  நன்மை , தீமைகளை  பரிசீலித்து , அதன்  பிறகே  மாற்றம்  கொண்டு  வர  முடியும் ..அதையே  இந்த  அரசு  செய்து  வருகிறது .

குற்றச்சாட்டு 2.  கலைஞர்  முதலமைச்சராக  இருந்தால் நீட்  தேர்வு  போன்ற  மாநில  நலன்  சார்ந்த  விஷயங்களை சாதித்து  இருப்பார் ... திமுகவுக்கு  காங்கிரஸ் கூட்டணி  கட்சி ..அப்போதே  மாநில  நலன் சார்ந்த  காவேரி  நடுவர்  நீதி  மன்ற  தீர்ப்பை  அரசிதழில்  வெளியிட  செய்ய  முடியவில்லை .. பாஜக  அதிமுகவின்  தோழமை  கட்சியோ  , கூட்டணி  கட்சியோ  அல்ல ..இன்று  பாஜக  அதிமுக  MP களின்  ஆதரவை  எதிர்பார்த்தும்  இருக்கவில்லை ..இந்த  நிலையில்  பாஜக வை  அனுசரித்து  நீட் போன்ற விஷயங்களில்  காரியம்  சாதித்து  கொள்வதே  புத்திசாலி  தனமான  அணுகுமுறை  ஆகும் ..


குற்றச்சாட்டு 3.  உச்சநீதிமன்றத்தை   மாநில  உரிமையில்  தலையிடுகிறது  என்று  அணுகவில்லை ..
பள்ளி  கல்வி  மாநிலங்களின்  பட்டியலிலும் , மருத்துவ மற்றும்  உயர்கல்வி பொது பட்டியலிலும்  வருகிறது.. பள்ளி  கல்வியின்  அதிகாரம்  12 ஆம்  வகுப்பு  தேர்ச்சி  முடிவுகளுடன் முடிவடைந்து  விடும் .மருத்துவ மாணவர் சேர்க்கை பொது பட்டியலுக்கான உரிமையில்  வருகிறது ..நாம்  இன்று மருத்துவ கல்விக்கான அனுமதியை  மாநில  பட்டியலில் வரும்  என்று கூறி , அதை  உறுதி  செய்ய  வேண்டும்  என்று  உச்ச  நீதி  மன்றத்தினை  அணுகினால்  எந்த  அளவு பயனளிக்கும் என்பது  கேள்விக்குறியே ..
மத்திய  அரசின் உதவியுடன் ஜல்லிக்கட்டு  போன்று  அவசர  சட்டம்  இயற்றி ஜனாதிபதி அனுமதி பெற்று , உச்ச  நீதி மன்றத்தில் முறையாக  விலக்கு  பெறுவதே  சரியாக  இருக்கும் .

நீட்  நிரந்தர  விலக்கு  பெற   வேண்டும்  என்பதே  புரட்சி  தலைவியின் கோரிக்கை  அதை  நோக்கியே  அதிமுக   அரசு  பயணிக்க வேண்டும் .

வியாழன், 20 ஜூலை, 2017

மீண்டு வாருங்கள் உலக நாயகரே

ஒரு காலத்தில்  கமலஹாசனின்  திரைப்படங்களின்  ரசிகன்  நான். அவரது  சிப்பிக்குள் முத்து , தேவர்  மகன் , புன்னகை  மன்னன்  போன்ற  படங்களுக்கு மிக நீண்ட  வரிசையில்  நின்று  டிக்கெட் வாங்கியவர்களில் நானும் ஒருவன் ..
ஆனால் , கடந்த  பத்து  ஆண்டுகளாக அவரது  இமேஜ் அவரது  சுமையாகி  விட்டதோ  என்று  தோன்றுகிறது .. கலைஞனாக  கமல் அமீர்  கானை  விட மிக பெரிய திறமைசாலியாக  இருக்கலாம்  . ஆனால்  கடந்த சில ஆண்டுகளாக லகான்,டங்கள் ,PK ,த்ரீ  இடியட்ஸ் , போன்ற  மக்கள்  மனதிற்க்கு நெருக்கமான  அதே  நேரத்தில்  கருத்தையும்  சொல்லும்  வெற்றி படங்களை  கொடுக்கிறார் அமீர் கான் . ஆனால்  கமல ஹாசன் தன்னுடைய  புத்திசாலி  தனம்  காட்சிக்கு காட்சி  தெரிய  வேண்டும்  என்றே படம்  எடுப்பது  போல்  தோன்றுகிறது . உத்தம  வில்லன் , மன்மதன்  அம்பு, விஸ்வருபம் எல்லாம்  அந்த  கேஸ்  தான் .மக்களின்  மனதுக்கு  நெருக்கமான படங்களை கொடுத்து  வருடங்கள்  ஆகி  விட்டது.

என்னுடைய 150 ரூபாயை   கொடுத்து கமல்ஹாசன் ஒரு   அறிவாளி  என்பதை நான்  அறிய  வேண்டும் என்ற அவசியம் இல்லை ..
இதில்  பிக் பாஸ் , அரசியல்  மோதல்  என்று  தனது retirement  நோக்கி  வேகமாக போய் கொண்டிருக்கிறார் .
மீண்டு  வாருங்கள் உலக  நாயகரே