அந்த காலம் தான் எவ்வளவு கடினமானது ...
விவசாயம் மட்டும் தான் பெரும்பாலானவருக்கு தெரிந்த தொழில் .அதுவும் பெரும்பாலும் ஆட்களையே சார்ந்தது ..காலையில் வயலுக்கு சென்ற அப்பாவால் இரவில் தான் வீட்டுக்கு வர முடிந்தது , நடவு ,அறுவடை என்றால் மாதகணக்கில் உழைப்பு தேவை பட்டது .
போக்குவரத்து என்றால் பெரும்பாலும் பேருந்து அல்லது ரயில்தான் , நாளின் பெரும் பகுதியை பேருந்துக்கு காத்து இருந்தே கழிந்தது .
கார், மோட்டார் சைக்கிள் வெகு சிலரிடம் இருந்தது அதுவும் தினசரி பயன்பாட்டுக்கு அல்ல .. ..நீண்ட தூரம் என்றால் இரண்டாம் வகுப்பு ரயில் அல்லது திருவள்ளுவர் பேருந்துகள் மட்டும் . சொகுசு ஆம்னி பஸ்கள் கிடையாது. விமானம் என்றால் மத்திய தர குடும்பத்துக்கு கீழிருந்து பார்பதுக்கானது , பயணத்துக்கானது அல்ல.
புதிய பாடலுக்காக ஒரு வாரம் ஒளியும் ,ஒலியும் காத்து இருக்க வேண்டும்.. ரஜினி , கமல் பட டிக்கெட் என்றால் விடியற்காலை திரை அரங்குக்கு சென்றால் மதிய கட்சிக்கான டிக்கெட் கிடைக்கும்.
தகவல் தொடர்பு என்றால் தந்தியும், landline தொலைபேசி யும்தான். வெளியூரில் இருந்தால் நெருங்கிய உறவினர் இறப்பையும் இன்லேண்ட் லெட்டரில் தான் தெரிந்து அழுதவர் இருக்கின்றனர் .
பெரிய அறுவை சிகிச்சை என்றால் அரசு மருத்துவமனையே கதி ..உங்களது நோயை விட அரசு மருத்துவமனை அதிகமாக பயமுறுத்தியது.
எந்த ஊருக்கு கிளம்பினாலும் கட்டி சாதம் கையில் எடுத்து போய்
கொண்டு இருந்தோம். வாரம் ஒருமுறை ஹோட்டல் எல்லாம் கிடையாது .எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நிகழும் நிகழ்வு .
புதிய உடைகள் தீபாவளிக்கு மட்டுமே எடுக்க முடிந்தது .
கோடைகாலத்தில் A/C கிடையாது . மின்சாரமும் தொடர்ந்து இருக்காது .
குடும்பத்தில் யாராவுது ஒருத்தர் மட்டுமே வேலை பார்த்ததால் வருமானம் குறைவு ...வாழ்க்கையில் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டுதான் போய் கொண்டு இருந்தோம் ..
மொபைல் கிடையாது , மால் கிடையாது , இணையம் கிடையாது facebook கிடையாது ,,இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது
ஏகப்பட்ட கிடையாதுகள் ..ஏகப்பட்ட வசதி குறைவுகள் , கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இத்தனையும் தாண்டி என் இன்றைய மனிதன் அந்த காலம் அழகானது என்று சொல்கிறான் ..
ஏனென்றால்
மனிதர்கள் , மனிதர்கள் , மனிதர்கள் ..
அன்றைய உங்கள் வாழ்க்கை நிறைய மனிதர்களால் நிரம்பி இருந்தது ..நண்பர்களாக , உடன் பிறந்தவர்களாக , உறவினர்களாக , பக்கத்து வீட்டுகாரர்களாக நிறைய மனிதர்கள் உங்களின்வாழ்க்கையில் இருந்தனர் , சுக ,துக்கங்களில் பங்கெடுத்தார்கள் ..உரிமையுடன் உங்களிடம் கோபித்து கொண்டார்கள் , சண்டை போட்டார்கள் .. உங்களிடம் அவர்களுக்கான நேரமும் இருந்தது .
நிறைய மனிதர்கள் , நிறைய மகிழ்ச்சி , நிறைய கண்ணீர் , நிறைய நிகழ்வுகள் ..நிறைவான வாழ்க்கை ..
இன்று உங்களுக்கு நேரமும் இல்லை , உங்கள் வாழ்க்கையில் மனிதர்களும் இல்லை ...
மனிதர்களை நேசியுங்கள் .வாழ்க்கையை மனிதர்களால் நிரப்புங்கள் .
LIVE IS BEAUTIFUL

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக