வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மறக்கபடும் மனிதர்கள்



நீண்ட உறக்கத்தில் இருந்து  தீடிரென எழுந்தேன்.மணி 7:00 ,உறக்கத்தில் இருந்த மனைவி, குழந்தைகளை எழுப்பாமல் அலுவலகம் கிளம்ப தீர்மானித்தேன்.காலண்டர் டிசம்பர் 23 ,2019 காட்டியது .குழந்தைகள் யாரோ மூன்று மாத தேதியை  கிழித்து  விட்டனர் போல.

அலுவலகத்தை அடைந்தேன் . எனது  இருக்கையில் யாரோ ஒரு  கண்ணாடி அணிந்த  என்னை  விட  5 வயது  சிறிய  இளைஞன் அமர்ந்திருந்தான். நண்பர்கள் யாரும்  என்னோடு பேச முற்படவில்லை.நானும் அமைதியாக இருந்து  என்ன  வித்தியாசமாக நடக்கிறது என்று கவனிக்க  ஆரம்பித்தேன்.

எனது பாஸ் வந்தார், அவனிடம்  நேற்றைய பணிகளை  கேட்டறிந்தார். நான் இல்லாமல் பணிகள் எதுவும் நடக்காது என்று கூறும் பாஸ் , அவனிடம் முன்பை விட பணிகள் சிறப்பாக நடப்பதாக கூறியது ஆச்சரியமாக இருந்தது.அலுவலகத்தில்  என்னோடு உணவருந்தும் எனது நெருங்கிய நண்பர்கள் பலர் அவனோடு எப்போதும் போல அதே மகிழ்ச்சியுடன் உணவருந்தினர்.

சரி  மாலையில் என்னோடு கிரிக்கெட் விளையாடும் நண்பர்களை சந்திக்கலாம்  என்று போனால், அங்கு நான் விளையாடும் ஓப்பனிங் பொசிஸனில் கருப்பாக என்னை  விட உயரம் குறைவான ஒருவன் விளையாடினான், என்னை விட அவன் நன்றாக விளையாடியது எனக்கே தெரிந்தது. நான் இல்லாமல் எனது அணி எளிதில் வெற்றி பெற்றது. எப்போதும் போல் வெற்றி மகிழ்ச்சியில் நண்பர்கள்.

முகநூல்  பக்கம் சென்று பார்த்தால் புதிதாக ஒரு சின்ன பையன் கதை , ஜோக்  எல்லாம் எழுதி இருந்தான் .எனக்கு வழக்கமாக லைக்  போட்டு பாராட்டும் முகநூல் நண்பர்கள் அனைவரும் அவனுக்கும்  லைக் போட்டு  பாராட்டி இருந்தனர்.. உறவினர், நண்பர் whatsapp குரூப்களில் எப்போதும் போல் அரட்டை , வாக்குவாதங்கள் நீண்டு கொண்டு இருந்தது

நான்  சில நிமிடங்கள் " Every Where Iam  completely replaced , How ? என்று யோசித்து கொண்டு இருந்து பிறகு இரவாகி விட்டது என்று வீட்டை நோக்கி சென்றேன் ..கதவு திறந்து இருந்தது .

என்னுடைய  மகள் " அப்பா இன்னைக்கும்  ஊர்லேந்து வர மாட்டாரா?  கேட்கிறாள். கண்ணீரை துடைத்து கொண்டு " இல்லம்மா, அடுத்த வாரம்  வருவார் " என்று சொல்கிறாள் மனைவி.

எனது புகைப்படத்துக்கு முன்பு விளக்கேற்றி வைக்கப்பட்டு இருந்தது . புகைப்படத்தின் கீழ் " தோற்றம்..10.10.1982..மறைவு 18.09.2019 என்று எழுதபட்டு இருந்தது..

என்னது  நான்  இறந்து மூன்று மாதம் ஆகி விட்டதா என்று திடுக்கிட்டு கத்தினேன்...
என்னங்க நடுராத்திரில கத்துறீங்க ? என்று மனைவி கேட்ட போது அனந்த கண்ணீருடன் கனவா ?என்று  கட்டியணைத்து " Now I know the priorities in life? என்றவாறு மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தேன்.
(Inspired by stories &  events)

திங்கள், 3 டிசம்பர், 2018

டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு

கற்பனையல்ல ... டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு.


அன்புள்ள ஆனந்தி ,                                                                             NOV-10 ,2018
            இன்றோடு 14 ஆண்டுகள் ஓடி விட்டது இந்த  அரபு  தேசத்தில்,     26 வயதில் இந்த ஊருக்கு வந்து, இரண்டு  ஆண்டுக்கு ஒரு முறை சில  மாதங்கள் மட்டும் நமது டெல்டா மண்ணில் , நமது  10 ஆண்டு திருமண வாழக்கையில் உன்னோடு  இருந்தது  சில மாதங்களே.
ஆனால் இந்த  14 ஆண்டுகால  உழைப்பில் , வாங்கி  போட்ட நிலத்தில் தென்னை வைத்து காய் காய்க்க ஆரம்பித்து விட்டது.
வாழையும்  ஆண்டு வருமானத்துக்கு ஆகி  விட்டது, இதனுடன் , மனதுக்கு பிடித்த வயலில் இரு போக சாகுபடி நடக்கிறது.  நமக்கும் நமது பிள்ளைக்குமான ஆடம்பரம் இல்லாத  எளிய தேவைகளுக்கு போதுமான வாழ்க்கை நடத்த  வருமானம் வருகிறது.மனம்  நிறைவாக இருக்கிறது. 

  நீ சொன்னது  போல்  40 வயது ஆகும் போது இந்த பாலைவன வாழக்கையை விட்டு விடலாம் , இந்த  முறை விடுமுறை நிரந்தரமானது . இனி பிள்ளைகளை பள்ளிக்கு விடுவது , பாடம்  சொல்லி தருவது, விவசாயம்  என  ஒவ்வரு  நாளும்  இனிமை ,
விட்டு சென்ற வருடங்களை நினைவில் கொள்ளாமல் இனி ஒவ்வரு நாளும் உன்னோடு, 
தீபாவளி, பொங்கல் எல்லாம் நாம் ஒன்றாக கொண்டாடுவோம் .
கேம்ப்  சாப்பாடு இல்லாமல் ,காலை டிபன் முதல்  இரவு உணவு வரைஎல்லாம்  உன் கையில்தான். உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நீ தனியாக  போக வேண்டியது இல்லை நாம் சேர்ந்து  போகலாம்.

 நாட்களை எண்ணி கொண்டு  இருக்கிறேன் .... விரைவில்  டெல்ட்டாவில் புதிய விடியலை நோக்கி.

 அன்புடன்

மகேந்திரன்.
சோழகன் குடிகாடு , ஒரத்தநாடு .


அன்புள்ள மாமாவுக்கு ,                                                              Nov 17,2018                                       

    நாம்  போடும் கணக்குகள்  ஒன்று என்றால் கடவுள் போடும் கணக்குகள் வேறு மாதிரியாகி   உள்ளது.  முன்தினம் அடித்த கஜா புயல்  நமது கனவுகளை நமது தோட்டத்து தென்னை மரம் போல் வேருடன்  பிடுங்கி  எறிந்து விட்டது.

 வைத்திருந்த 500 தென்னையில் ஏறத்தாழ 450 மரங்களை சாய்த்து விட்டது , பொங்கலுக்கு வெட்ட நினைத்த 2 ஆயிரம் தார்களில்  பெரும்பாலானவை பிடுங்கி எறிந்து விட்டது.
வயற்காடு சம்பா பயிரும் சாய்ந்து விட்டது ...

  வரும் நாட்கள் கடினமாக தான்  இருக்கும் போல் தெரிகிறது .கையிலிருக்கும்  சேமிப்பை வைத்து 4 முதல் 5 மாதம் சமாளித்து விடலாம், நாம் முழுவதும் மீண்டு  எழ சில வருடங்கள் ஆகும் ,
 மாமா வருத்தமாக தான் இருக்கிறது ,  இன்னும் 2 முதல் 5 ஆண்டுகள் நீங்கள் பாலைவன வாழ்க்கையை தொடர்ந்தால் மட்டுமே நாம்  கவுரவமான வாழ்க்கை இங்கு வாழ முடியும்,

 இத்தனை  வருடம் காத்திருந்த நானும் என் பிள்ளைகளும் இன்னும் சில வருடம் காத்து இருக்கிறோம் .

  நமது விடியலுக்கான நாள் தள்ளி போய் இருக்கிறதே தவிர தொலைந்து விடவில்லை .

நம்பிக்கையுடன்

ஆனந்தி
குமார் - இரண்டாம் வகுப்பு
 பூஜா - LKG

by வேலு மருதையன் -

 

வியாழன், 25 அக்டோபர், 2018

TTV- தலைவர்கள் உருவாக்கப் படுவதில்லை

தலைவர்கள்  உருவாக்கப் படுவதில்லை , யார்  கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு , வெற்றி பெறுகிறார்களோ  அவரே தலைவர்.
தமிழக அரசியலில்  ஜெயலலிதாவோ , கருணாநிதியோ , MGR  தமிழக அரசியலில்  உச்சத்தை  அடைந்தவர்கள்  அனைவரும்  நெருப்பாற்றை நீந்தியே   அடைந்துள்ளனர்.  அதனால்  தான்  25 முதல்  50 ஆண்டுகள்  வரை அந்த உச்சத்தை  தக்க வைக்கவும் முடிந்தது .அதிர்ஷ்டத்தால் அடைந்தால் தக்க  வைப்பது  கடினம் .

 கடந்த  ஒன்றரை  ஆண்டுகளாக  TTV  தினகரன்     பல்வேறு  இன்னல்களையும் , பலமுனை  தாக்குதல்களையும்     தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு  புன்னகையுடன்  சந்தித்து தனக்கென  ஒரு  இயக்கத்தையும் , ஒரு  இளைஞர்  கூட்டத்தையும் உருவாக்கி  வைத்து உள்ளார் .

இன்றைய தீர்ப்பும் அவரது (Test for the personality /character) தன்னம்பிக்கைக்கு  ஒரு பலபரிட்ச்சையாகவே  பார்க்கபட்டது  . ஆனாலும் இன்று  அதை  தான்  பின்னடைவாக  பார்க்கவில்லை  என்று நம்பிக்கையுடன்  எதிர்கொண்டார் .
இது அவர் மேலும் தமிழக அரசியலில் உச்சத்தை அடைவார் என்ற  நம்பிக்கை அளிக்கிறது \.


திங்கள், 15 அக்டோபர், 2018

TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு

பாஜக 2ஜி  விடுதலைக்காக  திமுகாவிற்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் காங்கிரசை கழட்டி  விட்டு  பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்  என்பது  மட்டுமே .
தேர்தலில்  குறிப்பிட  தக்க வெற்றி  பெற்றால் , வட மாநிலங்களில் குறையும்  எண்ணிக்கைக்கு திமுக வின் நாடாளு மன்ற  உறுப்பினர்களை உபோயோகித்து கொள்ளலாம் .  2ஜி  அப்பீல் ஒன்றும்  இல்லாமல் போய்   மாவட்டங்களில்
கூட்டணி  பேச்சு  வார்த்தையில் 5 க்கும் குறைவான தொகுதிகளை காங்கிரஸ்க்கு  அளித்தால் காங்கிரஸ்  தானாகவே கூட்டணியை விட்டு வெளியேறும்  இது தான்  பிளான் .

 இங்குதான் TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு என்ட்ரி..பாஜக , திமுகா வின் கள்ளத்தனத்தை உணர்ந்த  ராகுல் , TTV யின்  அ ம மு க வுக்கும் கதவுகளை திறந்தே வைத்து இருக்கிறார் .
பாஜகவிற்காக காங்கிரசை பகைத்து  கொண்டால் ,தனித்து நிற்கும் திமுக  டெல்டா  மற்றும்  தென் மாவட்டங்களில் ஊதி தள்ளப்படும் .
அதே நேரத்தில் இந்தியா முழுதும் பாஜக வெற்றி பெற்றால் 2ஜி யில் திமுக கதி அதோ கதி தான். இருதலை கொல்லி எறும்பாக தவித்து இருக்கிறார் ஸ்டாலின்.

வரும் வட  மாநில சட்டசபை காங்கிரஸ் பெறும் வெற்றியை வைத்து தான் திமுகவின் பயணம் அமையும்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

200 ரூபீஸ் உடன்பிறப்பு - ஒரு கலாய் சிறுகதை



ஒரு  டீன்  ஏஜ் பையன் காசோட  அருமை தெரியாம  இருந்தான். அவங்க அப்பாட்ட  போய்  எனக்கு  தினமும் பாக்கெட் மணி  200 ரூபாய் குடுங்கனு  கேட்டான் .

அதுக்கு  அவங்க அப்பா , 200 ரூபாய் அவ்ளோ சாதரணமா  போச்சா ,அதோட மதிப்பு  தெரியுமா உனக்கு ?
   ஒரு திமுக  உடன்பிறப்பு  இணைய தளத்தில்  200   ரூபாய்க்காக எவ்ளோ  கஷ்டப்படறான்னு தெரிஞ்சா  நீ  இப்டி  கேட்க  மாட்ட ?

அவன்  200 ரூபாய்க்காக  கலைஞர் முதல்  நான்காம்  கலைஞர் உதயநிதி மகன்  வரை, 2 டஜன்  குடும்ப  உறுப்பினர் அனைவருக்கும்  முட்டு கொடுக்கணும்.

200 ரூபாய்க்காக , மொத  நாள்  Go back Modi /amit  shaw  ன்னு  ட்ரெண்ட் பண்ணிட்டு , மறுநாள்  தலைமை  நினைவஞ்சலிக்கு அவங்களையே  தலைமையா போட்டா , கொஞ்சம்  கூட வெட்க  படாம  அரசியல் நாகரீகம் ன்னு முட்டு குடுக்கணும்.

200 ரூபாய்க்காக, குடும்பம்  ஒத்துமையா இருந்தா  அஞ்சா நெஞ்சர் ன்னு  சொல்லனும் , சண்ட  வந்தா அராஜகம் பண்றவர் னு சொல்லணும் .
 
மொத நாள்  வைகோவை  துரோகின்னு  ஸ்டேட்டஸ் போட்டு,மறுநாள்  போர்வாள் னு சொல்லணும் .

ஒருநாள் ஈழ தமிழர்  சகோதரன்னு  சொல்லணும் , இன்னொரு  நாள் அவனை தீவிரவாதி னும் சொல்லணும் 

கூட்டணி கட்சின்னு உதவாத  பத்து பேர்  இருப்பாங்க , அவங்களுக்கும்  200 ரூபாய்க்காக ஒரு அடிஷனல்  முட்டு ..

இதெல்லாம்  விட கட்சிக்காரன்  கூட்டத்துல பொண்ணுங்க  இடுப்பை  கிள்ளுவான் , பிரியாணிக்கு பாக்ஸிங் பண்ணுவான்  அந்த  கொடுமையை   எல்லாம்  நியாயபடுத்தனும் .

ஒரு  மனுஷன் 200 ரூபாய்க்காக எப்படி  பாடு  படுறான் பாத்தியா ?

மகன்  " அப்பா  எனக்கு  பணத்தோட அருமை  தெரிஞ்சிடுச்சு , இனிமே நான்  கேட்க மாட்டேன் 


புதன், 1 ஆகஸ்ட், 2018

முல்லா கதையும் , விசாரணை ஆணையமும்

முல்லா கதையும்  ,  விசாரணை ஆணையமும் 

ஒருநாள்  முல்லா  தெரு  விளக்கு  வெளிச்சத்தில்  எதையோ  தேடி  கொண்டு  இருந்தார் . அப்போது  வந்த முல்லாவின்  நண்பர்  "என்ன  தேடுகிறீர்கள்  முல்லா  என்று   கேட்டார். எனது  மோதிரம்  தொலைந்து  விட்டது , அதை  தான்  தேடுகிறேன்  என்றார் . மோதிரம்  இங்குதான்  தொலைந்ததா  என்று   நண்பர் கேட்டதற்கு முல்லா  பக்கத்தில்  உள்ள  இருளில்  தொலைந்தது  ஆனால்  இருளில்  தேட  முடியாது  என்பதால்  பக்கத்தில்  உள்ள  வெளிச்சத்தில்  தேடுகிறேன்  என்றார்.

அதுபோல்  ஜெயலலிதா  மறைவிற்கு  அமைக்கப்பட்ட  விசாரணை  ஆணையம் , போயஸ்  தோட்ட  வேலையாள் , அப்போலோ  ஹாஸ்பிடல் செக்யூரிட்டி என்று  பலரையும் கூப்பிட்டு சசிகலாவிற்கு  எதிராக  வாக்குமூலம்  கிடைக்குமா  என்று முயற்சிக்கிறது.
ஆனால்  அதிகாரங்களை வைத்திருந்த   அப்போதைய  பொறுப்பு  முதல்வர் , மாநில  சுகாதார   துறை  அமைச்சர், AIIMS டாக்டர்கள் , அவர்களை  அனுப்பிய மத்திய  சுகாதார துறை அமைச்சர் , மருத்துவமனையில் வந்து சந்தித்த  அப்போதைய  கவர்னர் , அப்போதைய மத்திய அமைச்சர் தற்போதைய  துணை  குடியரசு  தலைவர்  இவர்களை  விசாரிக்க  வேண்டியதுதானே ?

அதை  விட்டு  வாட்ச்மன்  வேலையாள்  விசாரிப்பது , வெளிச்சத்தில்  தேடிய  முல்லாவின்  கதை போல்  அல்லவா  இருக்கிறது.

அது  என்ன ஜெயலலிதாவிற்கு  ஸ்வீட்  கொடுக்கப்பட்டதா ? என்று ஒரு  கேள்வி.அவர் என்ன  கை  குழந்தையா ? ஜெயலலிதா  ஸ்வீட்  சாப்பிட்டாரா ? என்பது தானே  சரியான   கேள்வியாக இருக்க முடியும்.

ஒவ்வரு  முறையும் ஆணையத்தில்  இருந்து ஊடகத்துக்கு  கசிய  விடப்படும் தகவல் சசிகலா விற்கு  எதிராக  இருக்கிறது ?

முடிவுரை  எழுதி விட்டு  , கதையை  எழுதுகிறதா  ஆணையம் 

வியாழன், 21 ஜூன், 2018

அரசியல் பற்றிய ஒரு புரிதல் (தொடக்க நிலை )


அரசியல்  பற்றிய  ஒரு  புரிதல் (தொடக்க நிலை  )

தற்போதைய  நிலையில் ஒரு அரசியல்  இயக்கம்  வெற்றி  பெற  முதன்மையானவைகள்  .

   முதல் வகை (idealogist  ) :- கொள்கை /.சித்தாந்தம்  விளக்க  கூடியவர்கள், புள்ளி  விவரங்களை  விரல் நுனியில் வைத்து  இருப்பவர்கள் , கொள்கை  விமர்சனக்களுக்கு பதிலடி கொடுப்பவர்கள் ,தேர்தல் அறிக்கை  தயாரிக்க  உதவுவார்கள். தொலைக்காட்சி  விவாதங்களில்  தாக்கத்தை ஏற்படுத்த  கூடியவர்கள் .  மக்கள்  என்னதான்  காசு  குடுத்தாலும் , வாக்களிக்க  ஒரு லாஜிக் எதிர்பார்ப்பார்கள்  அந்த லாஜிக்கை தர  கூடியவர்கள்

 இரண்டாம்  வகை  (Muscle Man ) :- எனப்படும்  பலம் வாய்ந்தவர்கள் ,  ஜாதி  ரீதியாகவோ , பிராந்திய ரீதியாகவோ தொண்டர்   பலம்  உடையவர்கள். கட்சி கூட்டங்கள் , மாநாடுகள், போராட்டம்   போன்றவற்றிக்கு  தொண்டர்களை  திரட்ட  கூடியவர்கள். அமைப்பு  ரீதியாக ஒன்றியம்,முதல்  கிளை கழகம் வரை  தொடர்பு வைத்து  இருப்பவர்கள். ஆட்சிக்கு  வரும்  போது  அவர்களது பிராந்தியத்தில்  கிளை கழகம் வரை  பயனடைவதை  உறுதி  செய்ப்பவர்கள் . இயக்க  கட்டமைப்பை  உறுதி  செய்பவர்கள்.


மூன்றாம் வகை (Pockets ):-  ,கட்சி அதரவு  நிலையில் இருக்கும் மிக  பெரும்  தொழில்  அதிபர்கள் , ஆட்சி  நடக்கும்  போது  பொருளீட்டி  கொண்டு தேவைகளின்  போது  நிதி  தருபவர்கள். அதரவு  ஊடகங்களையும்  நடத்த  கூடியவர்கள்

இதில்  ஒருவரே  இரண்டு அல்லது  மூன்று  வகையில்  இருந்தால்  இன்னும்  சிறப்பு.

தலைவர் :-  மக்களை  ஈர்க்க  கூடியவர் , மேல சொன்ன 3 வகையிலும்  பலம்/அறிவு   வாய்ந்து இருக்க  வேண்டும்  , 3  வகையினரையும் கட்டுப்பாட்டில்  வைத்து  இருக்க  வேண்டும் . இவர்களுக்கான  balance maintain செய்ய வேண்டும் , எந்த  நிலையிலும் மனம்  தளராதவராகவும் ,நம்பி வந்தவர்களை  காப்பாற்ற கூடியவராகவும் இருக்க வேண்டும் ,இதையும்  தாண்டி மக்கள்/தொண்டர்   நலத்தில் இயற்கையாகவே கொஞ்சம்    அக்கறை உள்ளவராகவும்  இருக்க  வேண்டும்.

கள  பணியாளர்கள் :- இயக்கத்தின்  கடைசி  நிலை தொண்டர்கள், தலைவர் மற்றும்  பிராந்திய  தலைவர்கள்  மீது அதீத அன்பு  உடையவர்கள்.  தனது  வாக்கு  மட்டும் இல்லாமல் தன்  பகுதி வாக்காளரை  அழைத்து  வந்து தனது கட்சிக்கு வாக்களிக்க வைக்க கூடியவர்கள்

இன்றைய நிலையில்  இது    எல்லாம்  balanced இருந்தா  இயக்கம்  மக்களை  சென்றடையும் .

மத்தபடி  தகவல்  தொழில்  நுட்ப  பிரிவு  எல்லாம்  தேவைதான் , ஆனா களப் பணியில் இல்லாமல் வெறும்  ஸ்டேட்டஸ் போட்டு  கட்சி  வளரும்னு  நினைச்சா டேட்டா  வேணா  தீரும் , கட்சியெல்லாம்  வளராது.

இது  என்னுடைய  அரசியல்  பற்றிய புரிதல். சரியா? தவறா ? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்





புதன், 16 மே, 2018

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை.
வீழ்த்த படவே முடியாதவர் எவரும் இல்லை..
ஒரு மாநில வாரியான அலசல்
உபியில் மாயாவதி, அகிலேஸ், காங் இணைந்து சந்தித்தால் பாஜக 2014 ஆண்டை விட 50 தொகுதிகள் குறையும்...
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் , பீகார் , ஜார்கண்ட், குஜராத்தில் கடந்த முறை வென்றதில் குறைந்தது 30% இழுந்தால் இன்னும் 60 தொகுதிகள் குறையும்
மராத்தியத்தில் சிவசேனா தனித்து போட்டியிட்டால் 10 தொகுதி கூட பாஜகவுக்கு தேறாது.
ஆந்திராவில் நாயுடு டாட்டா காட்டி விட்டார், தெலுங்கானா ராவும் நெருங்க விடவில்லை.
கர்நாடகாவில் கவுடாவும் , காங்கிரசும் சேர்ந்தால் பாஜகவுக்கு 10 தொகுதி கூட தேறாது.
தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டி, யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு அரசியல் தற்கொலை தான்
2014 ஆண்டை விட கிட்டதட்ட 200 தொகுதிகள் குறையும்..
வடகிழுக்கு, வங்காளம், ஒரிசா சிறிது அதிகரித்தாலும் 160 தொகுதிகள் குறையும்.
..
இப்போதைக்கு தேவை எதிர்கட்சிகளின் ஒற்றுமை.. அதை ஜனநாயக படுகொலைகள் மூலம் பாஜக செய்து விடும்
உங்களை அர்னப ் போன்ற பொறுக்கி தின்னும் ஊடகங்களால் காபாற்ற முடியாது..
ஆட்டம் போடுங்கள் , வீழும் நாள் வெகுத் தொலைவில் இல்லை.

வியாழன், 26 ஏப்ரல், 2018

உறவுகளில் சில அரசியல் தலைவர்கள்

அரசியவாதிகள்  எல்லா  இடங்களிலும்  இருக்கின்றனர் .
உங்கள் உறவுகளின்  திருமணங்களில்   சில  அரசியல்வாதிகள்  இருப்பார்கள் நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்  யார் அவர்கள் என்பதை  ?

வைகோ :- திருமண வீட்டிற்கு  முதலில்  வருவார் , உரிமையோடு  எடுத்து  போட்டு  எல்லா  வேலையும்  செய்வார், ஆனால்  திருமணத்துக்கு  முன் னாடி  யாரிடமாவது  கோவித்து  கொண்டு  .
கோபமாக  கிளம்பி  விடுவார்.

டுமிலிசை :- எல்லா  கல்யாண  வீட்டிலும் டம்மி பீசா  ஒரு பொண்ணு  இருக்கும்  ,  ஆனால் திருமணமே  தன்னால்தான்  தான்  நடை பெறுவது   போல்  சீன்  போடும் அங்கும்  இங்கும்  வீடியோ  காமெரா  முன்னாடியே   சுத்தும்   ..

கருணாநிதி :- கல்யாண  வீட்டில்  நடக்கும்  பெரும் பிரச்சனைகளுக்கு  மூல காரணம்  அவராகத்தான்  இருப்பார்  .ஆனாலும்  அவரே  பிரச்சினையை  தீர்க்க  உதவுவது  போல்  நடிப்பார். எல்லாரது கவனமும் தன்  மேல்  இருக்க  வேண்டும்  என்பதை மட்டும்  உறுதி  செய்வார் .

ஜெயலலிதா :-  வெட்டு  ஒன்னு ,துண்டு ரெண்டாக  பேசும்  ஒரு பெண்மணி இருப்பார்    , சிறிது  முன் கோபக்காரர் . ஆனாலும் அவரது நியாயம்  இருப்பதால்    நிறைய    அவரை பிடிக்கும் .

தினகரன்  :- மனிதருக்கு   சொந்தக்காரன் , வழக்குனு  தலை போற ஆயிரம்  பிரச்சனை  இருக்கும் , ஆனால்  திருமண வீட்டில்   சந்தோசமா   முன்னாடி நின்னு   எல்லோரிடமும்  சிரித்து  சிரித்து  பேசி கொண்டு இருப்பார்.

எடப்பாடி :- உறவினர் வட்டாரத்தில் திடீரென  அதிர்ஷ்டம்  அடிச்சு  பணக்காரர் ஆகி  இருப்பார், தன்னுடைய  பெருமையை  தானே பேசி கொண்டு திரிவார்.

ராகுல்/ ஸ்டாலின் -  பெரிய  குடும்பத்து  பிள்ளைகள் , தான் பெரிசா  சாதிக்காட்டியும் குடும்ப  பெருமையை  வைத்து  கொண்டு  கல்யாண  வீட்டில்  மரியாதையை  பெறுவார்கள் ..











ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சசிகலா செய்த தவறு?

சசிகலா
33 ஆண்டு முன்பு,
காலம் அவருக்கு இரு வாய்ப்புக்களை தந்தது.
1, அரசு அதிகாரியான கணவருடன் நிம்மதியான உயர் நடுத்தர குடும்ப வாழ்க்கை.
2, உயிர் தோழியின் அரசியல் களத்திற்கு துணையாக போராட்ட வாழ்க்கை
அவர் தேர்ந்தேடுத்தது 2வது வாய்ப்பை.

திமுக ஆட்சி காலத்தில் " ஒரே ஒரு வாக்குமூலம், உங்களுக்கு விடுதலை, ஜெயலலிதாவிற்கு தண்டனை " என்ற பேரத்திற்கு அவர் சம்மதித்து இருந்தால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வேறு மாதிரி முடிந்து இருக்கும்,

யாருக்காக வாழ்ந்தாரோ , யாரை மருத்துவமனையில் இமையாக காத்து நின்றாரோ அவரது கொலைப்பழியையும் தாங்கி ஒரு புகைப்படம் வெளியிட்டால் அக்காவின் புகழூக்கு இழுக்கு தயங்கியவர்.

காலில் விழுந்து வாழ்வில் வளம் பெற்ற அத்தனை பெறும் துரோகியாகி நின்றனர்.
கணவரின் இறுதி மூச்சின் போது கூட அருகில் நிற்க  அனுமதி வேண்டிய போது, இவரால் வாழ்வு பெற்றவர்களாலே முட்டு கட்டைகள் போடப்பட்டது.

தஞ்சையின் தலை மகளால் வாழ்வு அடைந்தனர் பலர்.
ஆனால் இவர் முதலாவது வாய்ப்பை தேர்ந்து எடுத்து இருந்தால் கணவருடன் நிம்மதியான குடும்ப தலைவியாக சென்னையிலோ , தஞ்சையிலோ வாழ்ந்து இருப்பாரோ என்னவோ?

வெள்ளி, 2 மார்ச், 2018

TTV யின் ராஜபாட்டை

தந்தி TV பான்டே நேர்காணல் TTV யின் Aggresive முகத்தை வெளிப்படுத்தியது என்றால்,
 தந்தி TV ராஜபாட்டை TTV யின் அமைதி. யதார்த்தமான முகத்தை வெளிப்படுத்தியது.
கருணாநிதி போன்று மிமிக்ரி செய்ய கேட்ட பொழுது " கூச்சமாக இருக்கு" என்று சிரித்தபடி கூறியது nice.
GK மூப்பனார், வாஜ்பாய் பற்றிய நினைவு கூறலும் ,
அம்மா விலக்கி வைத்த தருணத்தை பற்றி மழுப்பல் இல்லாமல் விளக்கியதும் அருமை.
நிகழ்ச்சியின் எந்த ஒரு நொடியிலும் தற்பெருமை வெளிபடவில்லை.
நிகழ்ச்சியை பார்த்த பிறகு அண்ணன் TTV யின் மீதான மரியாதை இன்னொரு படி உயர்ந்துள்ளது..

ஸ்ரீதேவி மரணமும், சசிகலா மீதான பழியும்

ஸ்ரீதேவி துபாயில் இறந்ததால் போனி கபூர் பழி சொல்லில் இருந்து தப்பித்தார்.. 3 நாளில் துபாய் போலிஸ் தீர ஆராய்ந்து விடுவித்து விட்டது..
இந்தியாவில் இறந்து இருந்தால், மீடியா டிரையல் நடந்து இருக்கும், அவரது இழப்பை பொருட் படுத்தாமல் அவருக்கு கொலைக்கார பட்டம் கிடைத்து இருக்கும். கொலை செய்ததை நேரில் பார்த்தது போல் யூடியுப் வீடியோக்கள்.
அப்புறம் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன்.அவரும் வாட்ச்மேன், பால்காரன்  விசாரணை ஆரம்பிச்சு டைம்பாஸ் பண்ணுவார்
டிவி விவாதம் சம்பந்தமே இல்லாத ஆட்கள் வந்து கருத்து சொல்வார், நக்கீரன், விகடன் 6 மாதம் புலனாய்வு கட்டுரை ன்னு உடான்ஸ்.
தமிழச்சி ஸ்ரீதேவி, வடக்கிந்தியர் கபூர் தேசிய பிரிவினை குருப் கிளம்பிருக்கும்.
20 வருடம் மனைவியை நேசித்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த மனிதருக்கு பிரிவு எப்படியான வலியை தரும் என்பதை  பழி சொல்பவர்கள் உணர வேண்டும்.

பிகு = அம்மாவிற்கு 33 ஆண்டு காலம் தோழியாய் , சகோதரியாய் வாழ்ந்து , 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து பார்த்து கொண்டு, அவரின் மறைவின் வலியை தாங்கி கொண்டு, கொலை பழியையும் தாங்கி, இறந்தஅம்மாவின் இமேஜை காபாற்ற மருத்துவமனை புகைபடத்தை வெளியிடவும் மறுத்த எங்கள்  தாய் சின்னம்மாவின் தியாகமும் நினைவுக்கு வருகிறது...

புதன், 21 பிப்ரவரி, 2018

கண்ணடித்த நடிகையும், நீதிமன்ற வழக்குகளும்

முழு கற்பனை உரையாடல்

நீதிபதி:- இன்னிக்கு என்ன  கேஸ் ?
உதவியாளர் - காவிரி நீர் பிரச்சினை
நீதிபதி - அது பல வருச கேஸ், கர்நாடக வாய்தா கேட்கும், குடுத்துடலாம்.
உதவி - அடுத்து, MLA தகுதி நீக்கம் செய்து ஆட்சி செய்றாங்க அய்யா, அந்த கேஸ்
நீதிபதி - அதுல சபாநாயகருக்கு ஒரு 3 மாதம் டைம் குடுத்து பதில் சொல்ல சொல்லி நோட்டிஸ் அனுப்பலாம்..
உதவி - அடுத்து, விவசாய நிலத்துல எரிவாயு எடுக்க கூடாதுன்னு மனு அய்யா
நீதிபதி - அதுக்கு ஆய்வு கமிட்டி அமைச்சு 6 மாசத்துல அறிக்கை தாக்கல் செய்ய சொல்லலாம்
உதவி - நடிகர் குடிபோதையில் கார் ஏத்தி கொன்னுட்டார்.. கீழ் கோர்ட் தண்டனை தந்துருச்சு. கைது செய்யாம இருக்க ஜாமீன் மனு அய்யா,
நீதிபதி - அருமையான நடிகர் ப்பா அவர், இதுக்கு எல்லாம ஜெயில்ல போடறது, முதல் கேஸா எடுத்து  ஜாமீன் குடுத்துறலாம்.
உதவி -  கண்ணடிச்ச பாட்டு  நடிகை மீது எதோ ஒரு சங்கம் கேஸ் போட்ருக்கு, அதுக்கு அவங்க அப்பீல்,
 அப்புறம் ஒரு நடிகை ராணியா நடிச்ச படத்த தடைய நீக்க சொல்லி கேஸ்.
நீதிபதி - இது தனி மனித சுதந்திரம், கலை மீதான தாக்குதல்.. இன்னைக் கே விசாரிச்சு தீர்ப்பு கொடுப்போம்.
வாழ்க ஜனநாயக தூன்கள்..
|

வெள்ளி, 29 டிசம்பர், 2017

தமிழ் படம் காட்சியும் , இந்திய பிரதமரும்

தமிழ் படம் திரைப்படத்தில்  ஒரு  நகைச்சுவை  கட்சி வரும் ...

சிவா ஒரு பாடலில் முன்னேறும் காட்சியில் , சிவா  ஏர்போர்ட் , சிவா  ரயில் நிலையம் , சிவா  மருத்துவமனை  என்று  கிண்டலடத்திருப்பார்கள்.

ஆனால் இன்று நடக்கும் காட்சிகளை  பார்க்கும்  போது , அந்த  காட்சியை  விட  உண்மை  மோசமாக  இருக்கிறது .

மோதி தேர்தல் ஆணையம் ,
மோடி  நீதிமன்றம் ,
மோடி வருவாய்த்துறை ,
மோடி  அமலாக்க  பிரிவு ,
மோடி  காவல்துறை ,
மோடி  ஊடகங்கள் ,
என்று  ஒரு  மனிதரின்  அதிகாரத்தில்  அத்தனை  துறைகளும் அடிபணிகிறது ..

தமிழ் படம் காட்சியும் , இந்திய பிரதமரும்


திங்கள், 25 டிசம்பர், 2017

TTV RK நகரில் வென்ற காரணம்

வெறும் பணம்  என்று  ஒற்றை  வரியில்  உதாசீனப்படுத்தினால் உங்கள் கணிப்பு தவறு.
ஒரு உதாரணம் :-

RK  நகர்  தொகுதியில்   TTV  தினகரனுக்காக  களப்பணியில்தஞ்சாவூர்   டெல்டா பகுதியை  சேர்ந்த  இருக்கும் தம்பி  ஒருவரை  தொலைபேசியில்  எதேச்சையாக தொடர்பு  கொள்ள நேர்ந்தது.

சபரி மலைக்கு  மாலை  போட்டு  இருந்த  அவர்  மலைக்கு  செல்வதையும்  சிறிது  தள்ளி  வைத்து  பிரச்சார  பணியில்  தீவிரமாக இருந்தார்.

நான்  " ஏம்ப்பா  பொழப்ப   விட்டுட்டு  , இப்படி  வந்து  சென்னையில்  பிரச்சாரத்தில்  அலைந்து  கொண்டு இருக்கிறாய் ? என்று  கேட்டேன். ஒனக்கு  TTV  என்ன  தர  போறார் ? என்றேன்.

அதற்கு  அவர் ... நான் தஞ்சை  வந்த  போது  சில முறை  TTV யை  கூட்டத்தில்  ஒருவனாக  சந்தித்தது  உண்டு ... நேற்று  RK  நகரில். TTV  வண்டியுடன்  ஓடிவந்தேன் . கவனித்த  TTV , தம்பி  ஒடி வராதே  அடி  பட  போகுது  என்றார். "  பரவா இல்லைனே  என்று  தொடர்ந்தேன் . பின்னர். TTV  " திருக்காட்டுப்பள்ளி  தம்பி " (என்று  எனது  ஊர் பெயரை  குறிப்பிட்டு)  சொன்னா  கேட்க  மாட்டியா  என்று அன்புடன்  கண்டித்தார்..
இது  போன்ற  அன்புதான் எங்களை  போன்ற  இளைஞர்களை    களத்தை  விட்டு  வெளியேறாமல் அவருக்காக பணியாற்ற   தூண்டுகிறது  என்றார்.

இது  ஒருவரின்  அனுபவம் மட்டும்  அல்ல. பல்வேறு  இளைஞர்களின் அனுபவமும்  இதுதான் .

தேர்தல் களம்  வரும்  ,செல்லும் .. ஆனால்  களத்தை தாண்டி  தொண்டர்களின்  அன்பை  சம்பாதிக்கும்  தலைவனை  தேர்தல்  வெற்றி  தோல்விகள்  ஒன்றும்  செய்து  விடாது.




வெள்ளி, 15 டிசம்பர், 2017

கந்தசாமியும், வங்கியும் , காஷ்மீரும்


கந்தசாமி  :-  என்னமோ வங்கியில்  டெபாசிட்  பண்ண  பணத்தை  எடுக்க  முடியாதுன்னு சொல்ராங்களே   உண்மையா ? அரசாங்கம்  சட்டம்  கொண்ட  வர போகுதுனு சொல்ராங்களே?

பக்த் :- அத  பத்தி  எனக்கு  நன்னா  தெரியல , ஆனால்  இந்த  தேசத்துக்காக  நீங்க  ஏன் சின்ன  சிரமத்தை  கூட  பொறுத்துக்க மாட்டேன்ரேல் ... காஷ்மீரில் ..நம்ப  ராணுவ  வீரர்கள்  எல்லாம் ...

கந்தசாமி  :- என்னது மறுபடியும்  காஷ்மீரா . முடியல  ..ஆளை  விடுங்கடா  சாமி....


செவ்வாய், 12 டிசம்பர், 2017

தலைவன் -TTV

தலைவன் 

இடை தேர்தல் ,
ஆட்சி இல்லை ,
கட்சி இல்லை சுயேட்சையாக  போட்டி ,
விரும்புகின்ற  சின்னம் இல்லை ,
மத்திய , மாநில  அரசுகளை  எதிர்த்து பணி,
கடுமையான  கட்டுப்பாடுடன்  தேர்தல்  ஆணையம் ,

இத்தகைய ஒரு  சூழ்நிலையில் , பெரும்பாலான  தலைவர்கள் , தாங்கள்  நேரிடையாக  களத்தில்  இறங்குவது ரிஸ்க்  என்று  பெரும்பாலும்  வேறு  யாரையாவது  இறக்கி  ஆழம்  பார்ப்பார்கள் ..

போர்க்களத்தில்  எதிரியை சந்திக்க வீரர்களை   முன்னே  விட்டு பின்னால்  இருந்து  பார்க்கும்  தளபதிகளை  போல்  இல்லாமல் , ஆபத்து  எது   வந்தாலும் அதை  தானே  பயமின்றி  முன்னின்று சந்திக்கின்ற துணிவு தினகரனிடம்  இருக்கிறது.

போகும்  பாதை  பூப்பாதையாக  இருந்தால்  தொண்டனை  அனுப்பி  இருப்பார் , ஆனால்  அபாயகரமான பாதை என்பதால் தானே  சந்திக்கிறார்.

நாளை  வெற்றி  அடைந்தால்  ,  முன்னின்ற தன்னை  விட  தன்  வெற்றிக்கு  பின்னால் நின்று உழைத்த தொண்டர்களுக்கு   உரித்தாக்குவார் , சூழ்ச்சியால் முடிவு  வேறுவிதமாக இருந்தாலும்   அதை தன்னுடையதாக ஏற்கும்  மனப்பக்குவமும்  உள்ள  தலைவர்  TTV தினகரன்  மட்டுமே.

பிறந்த  நாள் வாழ்த்துக்கள்  TTV  தினகரன் 


80, 90 களில் வளர்ந்தவர்களின் நினைவுகளில் மட்டும்


நீண்ட இடைவேளைக்கு  பிறகு  ஒரு அரசியல் இல்லாத பதிவு..

இன்று கிட்டத்தட்ட  30 % மேற்பட்ட  திரைப்படங்கள்  திரைஅரங்கிலோ , தொலைக்காட்சியிலோ  பார்க்காமல் , மொபைல்  போன்  திரையில்  பார்க்கப்படுகிறது ...

YOU TUBE ,Hot star, Sun next, Amzon prime, Netflix..Tamilrockers ...ஏகப்பட்ட  வழிகள்  திரைப்படங்களை  பார்க்க...

80, 90 களில் திரை அரங்கின் நெரிசல்  இல்லாமல் வீட்டில்  அமர்ந்து  பார்க்க VCR ,VCP  வந்த  தருணங்களை  நினைத்து  பார்த்தால் ..

VCR  பெரும்பாலும்  வெளிநாட்டில்  இருந்து  இறக்குமதி  செய்யப்பட்டது.நடுத்தர  வர்க்கம் வாங்கும்  விலையும் அல்ல ..
கிட்டத்தட்ட  3 முதல்  4 மாத  சம்பளம்  அல்லது 40 முதல்  50 முட்டை  நெல்  விலை . எனவே  வாடகை  தான்  பெரும்பாலானவருக்கு ..

ஒரு  வார  இறுதியில் 12 மணி  நேர  வாடகை 200 வரை , கேசட்  வாடகை  தனி ,  வாடகைக்கு  வாங்கி வந்தால்  முரட்டுத்தனமாக 4 படங்களை  விடிய  விடிய தூங்காமல்  கடுமையாக பார்த்த  தருணங்களும்  உண்டு. டெக் (VCR  ) வாடகைக்கு  விடுதல்  ஒரு  தொழில் ..அதை  தூக்கி  கொண்டு  வந்து  போட்டு  காண்பித்து  செல்வதற்கு  ஒரு  ஆபரேட்டர்.அவருக்கு  போற  இடத்தில சாப்பாட்டு , ராஜ உபச்சாரம் தான் .. இவ்ளோ  கஷ்டப்பட்டு  எடுத்து  வந்து  பார்க்கும் படத்தின்  காஸெட்  சிக்கி கொண்டு  சிவராத்திரியான கதையும்  உண்டு.
  நல்லது , கெட்டது  நடக்கும்  வீடுகளில் , உறவினர்கள்   கூடி  பார்க்க  வாடகை  வீடியோ  என்பது  கலாச்சாரமாகவே  இருந்தது ..

அதே  போல் , இன்று  ஆயிரம்  ஆடியோ  பாடல்கள்  ஒரு  மொபைலில் .அன்று  ஒரு  காஸெட்  அதிக  பச்சம் 12 பாடல்கள் .. கம்பெனி காஸெட்  ரொம்ப  சிலரிடம் , பெரும்பாலும் பல  படத்தின் பாடல்களை ஒரு  காஸெட்டில்  பதிவு  செய்ய  ரெகார்டிங்  சென்டரே துணை. 
என்னென்ன பாடல்   என்பதை செலக்ட்  செய்ய  குடும்பத்தில்  விவாதம்  எல்லாம்  நடக்கும். இன்று  I Phone -8   என்ன  அன்று நல்ல  டேப்  ரெக்கார்டர்  ஸ்பீக்கர்  சிஸ்டம் +100 காஸெட்  வைத்து  இருக்கும்  நன்பர்கள்  எல்லாம்  செம்ம  கெத்து.

 வீடியோ  வாடகை , ஆடியோ ரெகார்டிங்  சென்டர் ,STD  பூத் ,வாடகை  சைக்கிள்   கடை , பொங்கல்  வாழ்த்து  கடை ,  போன்ற பல  தொழில்கள் இன்று காணவில்லை.ஆனாலும்  80, 90 களில்  வளர்ந்தவர்களின்   நினைவுகளில்  மட்டும் ...

தொழில்நூட்பத்தின் காரணமாக  வாழ்க்கை  இன்று  எளிதாகி  விட்டது ஆனாலும்  எதையோ  தொலைத்த  பீலிங் .....



புதன், 6 டிசம்பர், 2017

MGR நூற்றாண்டு விழாவும் , தொடரும் தர்ம யுத்தமும்

தமிழக  ஆட்சியாளர்களின்  3 தலையாய  பணிகள்

1. MGR  நூற்றாண்டு விழா  கொண்டாடுவது
2. குட்டி  கதை  சொல்லி  கூட்டத்தை கலைப்பது
3. திரும்ப  MGR  நூற்றாண்டு  விழா கொண்டாட்டம் .


இந்த  ஒரு  வருஷம்  ஒவ்வரு  மாவட்டமா MGR நூற்றாண்டு  விழா கொண்டாடி  ஒட்டியாச்சு .
அடுத்த  வருஷம்  என்ன  செய்வது ?
பேசாம  ஒவ்வரு  மாநிலமா போய்  கொண்டாடலாமா ? பி டீம்  பாய்ஸ்  யோசனை ..


Flight  ticket  offer போட்டா  தர்ம  யுத்தம்  குரூப்  மொத்தமா அடுத்த வருஷம் எல்லா மாசத்துலயும் டெல்லிக்கு  டிக்கெட் புக்  பண்ணி வைப்பது நல்லது ....உங்களை  கட்சியில்  வச்சு  செய்வார்கள் ...        மிஸ் இவன்  என்ன கிள்ளிட்டான்னு  கம்பளைண்ட்  பண்ணணும்ல ?

MGR நூற்றாண்டு விழாவும் , தொடரும் தர்ம யுத்தமும்


வியாழன், 23 நவம்பர், 2017

அதிமுகவின் பி டீம் -பாஜக புலம்பல்

நமது  பாஜக  நண்பர்  ஒருவரை  நீண்ட  இடைவேளைக்கு  பிறகு  சந்தித்தோம் ..
என்னங்க  தமிழக ஆட்சி  உங்கள்  தயவில்தான் நடக்கிறது  என்கிறார்கள் , சந்தோஷம்தானே என்றதற்கு ..

மனிதர் பொங்கி தீர்த்து  விட்டார் ..

2014 தேர்தலில் திமுக , அதிமுக  இல்லாத  கூட்டணி  18 % சதவீத  வாக்குகள்  பெற்றது .. இது  ஒரு பெரிய  விஷயம் .. பாஜக  மட்டும்  5 முதல்  7% வாக்குகளை  பெரும்  கட்சியாக  உருவெடுத்தது. நடுத்தர மற்றும்   உயர்நடுத்தர  குடும்பத்தினர்  நன்மதிப்பை  பாஜக  பெற்றிருந்தது .

ஜெயலலிதா  மறைவுக்கு  பின்  அதிமுக  உள்கட்சி  விவகாரங்களில்  தலையிடாமல்  இருந்தால் , அதிருப்தி உருவாகி பலர்  பாஜக விற்கு  வந்து  இருப்பார்கள்  + திமுக  எதிர்ப்பு  வாக்குகள்  பாஜகவை  நோக்கி  வந்து  இருக்கும் , படிப்படியாக  15 முதல்  20 சதவீதம்  பெற்று  பெரிய  இயக்கமாக  வலுபெறுவதற்கான  வாய்ப்பும்  இருந்தது ..

ஆனால்  தேவை இல்லாமல்  அதிமுக உட்கட்சி  பஞ்சாயத்தில் இறங்கி ,   இப்போ  தீர்ப்பு  வர போகுது , தேர்தலை  தள்ளி  வைக்க  போகிறார்கள் , தகுதி நீக்கம்  செய்ய போறார்கள் என்று  எல்லாத்தையும் தமிழக  பாஜக  தலைவர்கள்  சொல்லி, OPS யை   அடிக்கடி  பிரதமரை  சந்திக்க  வைத்து  எல்லாவற்றிற்கும்  பின்னால்  பாஜக  இருக்கிறது  என்பதை  மக்களிடம்  கொண்டு சேர்த்தனர்.

இப்போ  இந்த  அரசு  செய்யும்  தவறுகளுக்கு , அதிமுக  அமைச்சருக்கு  முந்தி  முட்டு  கொடுக்கிறார்கள்  சில தமிழக பாஜக  தலைவர்கள்.  அதுவும்  சிலருக்கு  தமிழகத்தில் பாஜக  ஆட்சியை  விட  இந்த  ஆட்சியே  நீடித்தால்  வசதி  அதிகம்  என்று  நினைக்கிறார்கள். எனக்கு  என்னமோ  அவர்கள்  பிஜேபி -பி டீம்  மாதிரி  தெரியவில்லை , தமிழக பாஜக  தான் ஆள்வோரின் பி டீம்  ஆகி  விட்டது.

ஆள்பவரிடம்  இரட்டை  இலையை   கொடுத்தாலும் , இவர்களை நம்பி  கூட்டணி வைக்க முடியுமா ,பாஜக  சிறிது அதிகாரம் இழந்தால் சசிகலாவையே கை கழுவியவர்கள் , பாஜக வை எளிதில்  தூக்கி  எறிந்து விடுவார்கள்,

சொந்தமாக கட்சிக்கு  என்று   இருந்த  5% வாக்கு வங்கியையும்  நாங்கள்  இழந்து  கொண்டு  இருக்கிறோம்  என்பது  தான்  உண்மை.


அட  இவுரு  சொல்றதும்  சரிதான்  போல ... ..

அதிமுகவின் பி டீம் -பாஜக  புலம்பல்