திங்கள், 6 நவம்பர், 2017

ஒரு தலைவன் உருவாகிறான்


   கடந்த  வாரம், திரு  TTV  தினகரன்  பசும்பொன்  சென்ற பொழுதும், தஞ்சாவூர்  வருகையின்போதும் , மிக பிரமாண்டமான   கூட்டம்  கூடியது .அதிலும்  மிக  பெரும்பாலும் இளைஞர்கள்  18 முதல்  35 வயதுக்கு  உட்பட்டவர்கள். 40 வயதிற்கு  மேற்பட்டவர்களை  எண்ணி  விடலாம் . அப்படி  ஒரு ஆர்ப்பரிப்பு , ஒவ்வரு  இடத்தையும்  கடக்க  சில மணி நேரம் ஆனது.

காசு குடுத்து  கூட்டி  வந்தார்கள்  என்று  எளிதில் புறந்தள்ளி   விட முடியாது . காசு  கொடுத்து  வந்தவர்கள்  யாரும்  தங்களது  சொந்த  இரு  சக்கர  வாகனங்களில்  வந்து  ரோட்டின்  இருபுறமும் நின்று   ஆர்ப்பரிக்க  மாட்டார்கள்.  TTV  அருகில்  சென்று  புகைப்படம்  எடுக்க  துடிக்க மாட்டார்கள் ..

 TTV யையும்   சும்மா  சொல்ல  கூடாது, சளைக்காமல்  மனிதர்களை சந்திக்கிறார் . ஆயிரக்கணக்கில் இளைஞர்களுடன்   புகைப்படம்  எடுத்து கொள்கிறார் . 60-70 களில்  இருந்த புரட்சி  தலைவர்  போல்  எளியவர்கள் TTV யை  எளிதில்  அணுக  முடிகிறது . இரண்டு , மூன்று முறை  பார்த்தவர்களை  பெயர் சொல்லி  அழைக்கும் பழம்பெறும் தலைவர்களின் குணமும்  TTV  தினகரனிடம் உள்ளது.  துண்டு  சீட்டு , குறிப்புகள்  இல்லாமல்  மிக  பெரிய  கூட்டங்களில்  உரையாற்றுகிறார்.  பத்திரிகையாளர்களை  பதட்டம்  இல்லாமல்  வெகு  எளிதாக  கை  ஆளுகிறார் .



TTV க்கு  என  ஒரு கூட்டம்  உருவாகி  விட்டது .  டெல்டா மற்றும்  தென்  மாவட்டங்களில்  குறிப்பாக மிக  பெரிய  இளைஞர்  படை உருவாகி  விட்டது,   மேலும் ஒரு  மாற்றத்திற்கான வேகம் (momentum for  change  ) தெரிகிறது .

இனி இவர்கள்  முன்  இருக்கும்  சவால்கள்.

1, இந்த வேகத்தை  தேர்தல்  வரும்  வரை  தக்க  வைத்து  கொள்ள  வேண்டும் .
'
2, இந்த  ஆட்சியை  எவ்வளவு  விரைவில்  கலைக்க  முடியுமோ  அவ்வளவு  விரைவில்  கலைக்க  வேண்டும் .

3, எதிர்கொண்டு இருக்கும்  பொய் வழக்குகளை  முறியடிக்க  வேண்டும் .

4, ஒரு  ஜாதி  என்ற முத்திரை  விழுவதை எந்த  காலத்திலும்  அனுமதிக்க  கூடாது

5, ஜெயலலிதாவுக்கு என   விழும்  பெண்  வாக்காளர்களின்  வாக்குகளை   கவர  வேண்டும் .

6, இந்த  இளைஞர்  கூட்டம்   மக்களின்  பிரச்சனை  சார்ந்து  களப் பணி  ஆற்றிட  வேண்டும் .

இவற்றையெல்லாம்  செய்து  முடித்தால் , TTV ..என்னும்  தலைவனின்  பெயர்  அதிமுக  வரலாற்றில்  பொன்  எழுத்துக்களால் எழுதப்படும். 




திங்கள், 30 அக்டோபர், 2017

சின்னம் யாருக்கு கிடைக்கும்?

#சின்னம்
நாடு சுதந்திரம் அடைந்த பொழுது 80% மக்கள் எழத்தறிவற்றவர்கள்.
தேர்தலின் போது வேட்பாளர் பெயரையோ, கட்சியின் பெயரையோ படிக்க முடியாதவர்கள்.
அவர்களுக்காக உருவானது தான் சின்னம்,
சுவர்களில் சின்னம் வரைந்து பிரபலமடைய வைத்தனர்.
ஆனால் இன்று 95% மக்கள் கல்வி அறிவு உடையவர்கள். மக்கள் சுவர், செய்திதாள் எல்லாம் தாண்டி Facebook, whatsapp, internet, Satellite Channel வரை அரசியல் பேசுகின்றனர்..
இன்னும் சின்னம் கிடைச்சா ஈஸியா ஜெயிப்போம்ன்னு நினைக்கிறது 90% மக்களையும் முட்டளா நினைக்கிற மாதிரி தான்..
சின்னம் இருக்கிற இடத்தில் தான் இருப்பேன், வாக்களிப்பேன் என்பது அதை விட முட்டாள்தனம்.

#வெற்றியோ , தோல்வியோ உங்களின் நடவடிக்கையே தீர்மானிக்கும்.

ஒரு செய்தி மக்களை சென்றடய நாள் கணக்கில் ஆகி , மக்கள் அதை பற்றி வருடக்கணக்கில் பேசுவார்கள்,
இன்று மக்களை நிமிடத்தில் செய்தி  சென்றடைந்து, மக்கள் 4 நாட்களில் மறந்தும் விடுகின்றனர்...

இன்றும் நான் என்ன தப்பு வேணாலும் செய்வேன், ஆனால் மக்கள் MGR சின்னத்துக்காக எனக்கு வாக்களிப்பார்கள் என்பதும் மூட நம்பிக்கை தான்..

#வெற்றியோ, தோல்வியோ உங்கள் நடவடிக்கையே அதை தீர்மானிக்கும்....

its my opinion........

செவ்வாய், 24 அக்டோபர், 2017

TTV தினகரனும் YSR ஜெகன் மோகன் ரெட்டியும் ...வழிகாட்டும் ஆந்திர வரலாறு.

TTV  தினகரனும்  YSR  ஜெகன் மோகன்  ரெட்டியும் ...வழிகாட்டும் ஆந்திர  வரலாறு.


      2009  YS  ராஜசேகர  ரெட்டி மறைவுக்கு  பிறகு , ஒட்டுமொத்த  ஆந்திர காங்கிரசும்  ஜெகன்  மோகன்  ரெட்டியின்  பின்  அணிவகுக்க  தயாராகிறது. ஆனாலும்  மத்திய  காங்கிரஸ் அரசுக்கு  மாநிலத்தில்  இன்னொரு வலிமையான  தலைவரை  உருவாக்க  மனம்  இல்லை . ஜெகன்  மோகன்  ரெட்டியை ஒதுக்கி  விட்டு , மக்கள்  செல்வாக்கு  இல்லாத ரோசையா , கிரண் குமார்  ரெட்டி  போன்றவர்கள் முதல்வர்  ஆக்கபடுகிறார்கள் .

மத்திய  மாநில  அரசுகளின் அதிகாரத்தை  பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக   YSR ஆதரவாளர்களை  இழுக்க  ஆரம்பித்தனர். 
சுதாரித்து  கொண்ட  ஜெகன்  மோகன் , தன்னுடைய ஆதரவாளர்களான 18 MLA களுடன்  பிரிகிறார். அவரின்   மீது வருமான  வரி துறை , அமலாக்க  பிரிவின் மூலமாக   வழக்கு  போடபடுகிறது . 16 மாதம்   சிறையில்  அடைக்கபடுகிறார்.                                மத்தியில்  மாநிலத்திலும்  காங்கிரஸ் ஆட்சியை  தொடர்கிறது . இரண்டாம்  கட்ட  தலைவர்கள் எல்லோரும் அதிகாரத்தை விட  மனமில்லை காங்கிரஸில் தொடர்கிறார்கள்

தேசிய  கட்சியாதலால் சின்னம்  கேட்க கூட  முடியவில்லை . வேறு சின்னம்  தான் . 55 ஆண்டுகால  ஆந்திர அரசியலில்  கை  சின்னம்  இல்லாமல் நிற்க முடியுமா என்றார்கள். ஆனாலும் ஜெகன் செல்வாக்கு  உயருகிறது . 2014 பிஜேபி  கூட்டணியுடன்  போட்டியிட்டு , மோடி  அலையில் மயிரிழையில்  நாயுடு வெற்றிபெறுகிறார் ..ஜெகன் மோகன்புதிய  சின்னமான  மின்விசிறி  சின்னத்தில் (FAN) போட்டியிட்டு  67 சட்டமன்ற தொகுதிகளிலும் , 9 நாடாளுமன்ற  தொகுதியிலும்  வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சி  தலைவர்  ஆகிறார் .

சிரஞ்சீவி  போன்ற  நடிகர்கள்  வந்து  காங்கிரஸில்  சேர்ந்து  மாநிலத்தை இரண்டாக  பிரித்து குட்டையை  குழப்பினாலும்,   காங்கிரஸ ஒரு நாடாளுமன்ற  தொகுதியிலோ  , ஒரு சட்டமன்ற  தொகுதியிலோ கூட  வெற்றிபெற  முடியாமல்  படுதோல்வியை  சந்திக்கிறது . கை  சின்னத்துடன்  அதிகாரத்தில்  இருந்த  காங்கிரஸ்  மாநில  அரசியலில்  தொலைந்து  போகிறது

கிட்டத்தட்ட  ஜெகன்  மோகன் போன்றுதான்  TTV  அவர்களின்  நிலையும்  , ஆயிரம்  வழக்குகள் இருந்தாலும்  ,  தலைமை  பண்பு , மத்திய  அரசுக்கு  அடிபணியாமை ,  மாநில  நலனில்  அக்கறையும் , மாநில உரிமையை   விட்டு  கொடுக்க மாட்டார்   என்ற  நம்பிக்கையும்  சேர்ந்து  அரசியல்  வெற்றிடத்தை  நிரப்பும்  வலுவான  தலைவராக  உருவாக்கும் என்று   நம்புகிறோம் . .

மேலும்  அதிமுக  இரண்டாம்  கட்ட  தலைவர்களால்  பலம்  அடைந்த  இயக்கம் இல்லை . இது  ஒற்றை  தலைமையையும் , தொண்டர்களையும் பலமாக  கொண்ட  இயக்கம் .   இரண்டாம்  கட்ட தலைவர்கள்  என்று  சொல்லபடும்  பலரும்  மக்களை  சந்தித்து  வந்தவர்கள்  அல்ல . சசிகலா  உறவினர்கள் வீட்டையும் , போயஸ்  தோட்டத்து கேட்டையும்  சுற்றி பதவி  பெற்றவர்கள் .

இப்போது  நிர்வாக  குளறுபடிகளால் ஆள்பவர்கள்  மேலும் வலிமை  இழப்பார்கள் .  தேர்தல்  வரும்போது இன்று  ஆட்சியில்  இருக்கும்  EPS ,OPS  போன்றவர்கள் ரோசையா , கிரண்குமார்  ரெட்டி போன்று  காணாமல்  போய்  விடுவார்கள்.  மாநில  நலன்  சார்ந்த போராட்டங்களால்  TTV  வலுவடைவார். TTV  தினகரன்
 திமுக விற்கு  வலுவான  சவாலாக  விளங்குவார். அவரிடமே   அதிமுக  இயக்கமும் வந்து சேரும் . 

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சசிகலா யார் ?

அவரே  ஆளுநர் ,
அவரே   மத்திய  சுகாதார  துறை  அமைச்சர் ,
அவரே  மத்திய உள்துறை  அமைச்சர் ,
அவரே  மாநில  தலைமை  செயலர் ,
அவரே  பொறுப்பு முதல்வர் ,
அவரே மாநில  சுகாதார துறை  அமைச்சர் ,
அவரே  மத்திய குற்றப்பிரிவு போலீஸ்,
 அவரே  இன்டெலிஜென்ஸ் ,
அவரே  மத்திய அமைச்சர் ,
அவரே  மாநில  சுகாதார  துறை  செயலர் .
அவரே  எய்ம்ஸ்  மருத்துவர் .
அவரே  அப்பலோ  நிர்வாகம் ,
அவரே  இந்திய  தேசம்  முழுதும் நிர்வகிக்கும் பிரதமர் .
அவரே  தமிழக அமைச்சரவை ,
 அவரே  z + பாதுகாப்பிற்கும் பொறுப்பு?
அவரே  சிங்கப்பூர் மற்றும் லண்டன்மருத்துவர்களின் பொறுப்பாளர் ?  

யார் இவர் ?


அவர்தான்   முன்னாள்  முதலமைச்சரின்  தோழி ,   சசிகலா  அம்மையார்.

அவர்  இத்தனை  அமைப்பிற்கும் பொறுப்பாக  இருந்தால் மட்டும் தான் அவரை  முதல்வரின் மரணத்திற்கு காரணம் என்று  சொல்ல  முடியும் . இவரிடம்  இத்தனை  அமைப்புகளும்  மண்டியிடுமா என்று  யோசிக்க  வேண்டும்?   அதனால்  அவருக்கு  என்ன  லாபம்? 

அவர்  செய்த  ஒரே  பாவம்  தன்னுடைய  உயிர்  தோழியின் (privacy )  அந்தரங்க  உரிமை  காப்பற்றபட  வேண்டும்  என்று  நினைத்துதான். மீடியாவிற்கு முதல்வர் உடல் நிலையை   லைவ் ரிலே மற்றும்  வீடியோ ,புகை படங்களை தந்து    TRP   ஏற்றமால் விட்டது தான் .







புதிய இந்தியாவின் பெற்றவர் யார் ?

இன்று மாதம்  ஒருமுறை  ஏகப்பட்ட  விளம்பரங்களுடன் "புதிய இந்தியா " பிறந்து விட்டது  என்று  கூறும்  பிரதமருக்கு  முன்னாள் , உண்மையில்  சத்தம்  இல்லாமல்  புதிய  இந்தியாவை உருவாக்க காரணமாக  இருந்தவர் மறைந்த  பாரத  பிரதமர் திரு நரசிம்மராவ்... அன்னிய  செலாவணி  பற்றாக்குறைக்கு   தங்கத்தை  அடகு வைத்த  தேசத்தில்  இருந்து , ஒரு  வலுவான பொருளாதார தேசமாக  உருவாக  காரணம் ஆனவர்.
இன்று அசுர  பலத்துடன் இருந்து  கொண்டு  பாஜக  சாதிக்க  முடியாததை , ஒரு  மைனாரிட்டி  அரசாங்கத்தை வைத்து  கொண்டு  சாதித்தவர். ஒரு சில  குற்றசாட்டுகள்   இருந்தாலும்  உண்மையில் புதிய  இந்தியாவின்  சிற்பி  இவர்தான் ..இன்றும்  சத்தம்  இல்லாமல்  சாதிக்க  முடியும்  என்பவர்களுக்கு உதாரணம் .

வரலாறில் இவருக்கான  சரியான அங்கீகாரம்   அளிக்கப்படவில்லை . மேலும்   காங்கிரஸ்  இயக்கமும்  இவருக்கான அங்கீகாரத்தை  அளிக்கவில்லை . இவர்  5.5 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி  பெற்ற  நந்தியால்   தொகுதியில் இன்று காங்கிரஸ்  சில  நூறு  ஓட்டுக்கள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்ததே   காங்கிரசின்  பாவத்திற்கான  தண்டனை ..


வியாழன், 21 செப்டம்பர், 2017

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில்

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில் , ஏன் தினகரன் ,ஸ்டாலின் போன்ற திராவிட இயக்க  தலைவர்கள் MLA  தகுதி  இழப்பு  வழக்குகளுக்கு வட இந்திய  வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிறார்கள்.தமிழக  சட்ட கல்லூரிகள் சரியில்லை, தமிழகத்தில் கல்வி  தரம்  இல்லை. நவோதயா பள்ளி வேண்டும், etc ,etc  -  எதிர் தரப்பு

தமிழக வழக்கறிஞர்கள் இந்திய  அளவில் எந்த  மாநில வழக்கறிஞர்களுக்கும்  குறைவானவர்கள் அல்ல ..தகுதி இழப்பு , சபாநாயகரின் அதிகாரம் போன்றவை அரசியலமைப்பு சட்டங்களின்  அடிப்படையை  கேள்வி கேட்கும்  வழக்குகளில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிறப்பாக கையாள்வதால் அவர்களை அணுக வேண்டியுள்ளது. சுப்ரீம் கோர்டடில் தமிழக வழக்கறிஞர்கள் ஓரளவு  இருந்தாலும்,  மிக பெரிய அளவில் இல்லாதது , நமது வழக்கறிஞர்கள் டெல்லியில் வசித்து , அங்கு பணிபுரிவதை சௌகரிய குறைவாக நினைப்பது தானே ஒளிய , திறமை குறைவு காரணம் இல்லை  என்று நினைக்கிறேன் .

எல்லா  பிரச்சனைக்கும் இறுதி முடிவு எடுக்க டெல்லி வந்து உச்ச நீதி மன்றத்தை அணுக வேண்டும்  என்ப பெரிய அநீதி . உச்ச நீதி மன்ற தென்னிந்திய கிளை சென்னையில் அமைப்பது தான் சரியான தீர்வாக  இருக்குமோ ஒழிய , கல்வி தரம் காரணம் இல்லை என்பது  எனது வாதம் .



செவ்வாய், 19 செப்டம்பர், 2017

அடிமைத்தனம் சுகமானது ,

அடிமைத்தனம் சுகமானது ,
முடிவெடுக்க  வேண்டிய  பிரச்சினை  இல்லை ..
முடிவுகளின் விளைவுகளை  பற்றி  சிந்திக்க  வேண்டியதில்லை .
யாருக்கும்   வழிகாட்ட  வேண்டியது  இல்லை .
எதிர்காலத்தை  பற்றி  பற்றி  பெரிதாக யோசிக்க  வேண்டியது  இல்லை.எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விடலாம்
கட்டளைக்கு  அடிபணிவதே  ஒரே பணி .
பொருளாதார வளர்ச்சிக்கு  வாய்ப்பு இல்லை  என்று தெரிந்தால் ,   வாய்ப்புள்ள தலைமைக்கு விசுவாசத்தை   மாற்றி விடலாம்.
பிறர் நலம் பற்றி சிந்திக்க வேண்டாம் ..
வெற்றி ,தோல்வியின் பெரிய  பாதிப்பு இல்லை ..

தலைவனாக  இருப்பதுதான்   தலைவலி.

இந்த  கட்டுரை இன்றைய  ஆட்சியாளர்களை பற்றியது  அல்ல .. சுய  தொழில் செய்ய  பயந்து பெரும் நிறுவனர்களில் கடை நிலை  வேலையில் பொழுதை கழிப்பவருக்கானது மட்டும் என்று சொன்னால்  நம்ப வேண்டும் .

இப்போது இன்னொரு முறை படியுங்கள் ...