வியாழன், 29 டிசம்பர், 2016

அழிந்து விடுமா அதிமுக ?



தமிழக அரசியல் இயக்கங்கள் ஒரு  தலைவரை முன்னிறுத்தி  களம் கண்டாலும், அரசியல் இயக்கம் என்பது  ஒரு தலைவர் மட்டும்  அல்ல .
எப்படி  ஒரு அரசு  செயல்படுகிறதோ  அதே போல அரசியல் இயக்கமும்  செயல்படுகிறது . கிளை கழகம் , ஒன்றிய ,நகர கழகம், மாநில  நிர்வாகிகள், அது போல  சார்ந்த அமைப்புகள் ஆன மாணவர் அணி, இளைஞர் அணி,வழக்கறிஞர்  அணி  என்று பல்வேறு  பிரிவுகளை  உள்ளடக்கியது . தலைவர்கள் முன்னிறுத்தபட்டாலும் ஒவ்வரு கிளை கழகம் முதல் அணைத்து  நிர்வாகிகள் முன்னெடுத்து செல்வதன் மூலம் மட்டுமே ஆதரவு நிலை வாக்குகளாக  மாற்றபடுகிறது. தொண்டர்கள் தான்  இயக்கம் .

தமிழகத்தில்  திமுக ,அதிமுக வை  தவிர  எந்த கட்சிக்கும்  தமிழகம் முழுவதும் உள்ள  அனைத்து வாக்கு சாவடியில் முகவர் ஆக  கூட ஆள் கிடையாது. அதனால் தான் தலைவர் தோன்றினாலும்  வாக்கு வாங்க முடிவதில்லை.

அதிமுக ,திமுக வும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது போல்  தோன்றினாலும் 1977 முதல்  சட்ட பேரவை  தேர்தல்களை கணக்கில் எடுத்தால் 7-2 என்ற  நிலையில்  அதிமுக  முன்னணி வகிக்கின்றது.இன்றும்  இந்தியா வின்  மூன்றாவது பெரிய கட்சி.

அம்மா  அவர்கள்  மறைந்து விட்டார்கள்?

  கட்சி உடைய வேண்டும்  என்று எதிர்பார்த்தார்கள், உடையவில்லை ,இப்போது அதிகாரத்திற்காகவும் , பணத்திற்காகவும் ஒன்றாக உள்ளனர் என்று குற்றம் சுமத்துகிறார்கள் .
இவர்களு பயந்து 
குடும்பம்  , இளமை , கனவு , எதிர்காலம் எல்லாவற்றையும்  இரண்டாம் பட்ச்சமாக்கி  இயக்கமே பிரதானம் என்னும் லட்சியத்துடன் வாழும் லட்சக்கணக்கான தொண்டர்கள்           இருக்கிறார்கள் அவர்கள்  கனவை சிதைக்க முடியுமா ? 
இல்லை தங்களுக்கு பிறகு நூறாண்டுகள் இயக்கம் நிலைக்க வேண்டும் என்று நினைத்த அம்மா மற்றும் தலைவரின் கனவைதான் சிதைக்க வேண்டுமா?

அம்மா உடல்நிலையை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து பெற்று தந்த  ஆட்சியை , அவரது  லட்சியங்களையும் ,வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பயன்படுத்தாமல் தூக்கி ஏறியத்தான் முடியுமா ? 

ஒற்றுமையுடன்  நின்று,வாழ்க்கையை  அம்மாவிற்காக  தியாகம்  செய்தவரை  கழகத்தின் புதிய   பொது செயலாளர் ஆக  தேர்தெடுத்து விட்டார்கள். கழகத்தின்  கடைசி கட்ட தொண்டன் வரை கட்டுக்கோப்புடன் தான்  இருக்கிறான்.  போன தேர்தலில் கடைசி வரை அதிமுக வை  தோற்கடிக்க நினைத்த ஊடகங்கள் தான் எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

1 தொண்டர்களுக்கு   கிடைக்க கூடிய உயர்வு. திமுகவில்  நான்  ஆறாம் வகுப்பு படித்த போது  சட்ட மன்ற  உறுப்பினராக இருந்தவரே எனது மகன் ஆறாம் வகுப்பும்  படிக்கும் இப்போதும் சட்ட மன்ற உறுப்பினர் ,மற்றும் மாவட்ட கழக செயலாளர். ஆனால்  அதிமுக வில்  தொண்டனும்  தலைவன்  ஆகும் சாத்தியம் .

2. திமுக வை யும்  இதர  மதவாத , சாதிய  இயக்கங்களையும்  தடுக்கும் சக்தி  அதிமுக விற்கு மட்டும் உள்ளது என்னும் மக்கள்  நம்பிக்கை .

3. எத்தனை வழக்குகள் ,அச்சுறுதல்கள் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் காவேரி பிரச்சினை ,முல்லை பெரியார் , ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்/மாநில நலனை அதிமுக தலைமை  விட்டு கொடுக்காது   என்ற நம்பிக்கை.

4. அடித்தட்டு மக்களை  சென்றடையும்  மக்கள் நல திட்டங்கள் .

5. அதிமுக  ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் கட்சி உறுப்பினர்கள் தலையிட மாட்டார்கள் , சிறப்பான  சட்ட ஒழுங்கு இருக்கும்  என்னும் நம்பிக்கை 

6,  தவறு செய்தால் பாராபட்சம் இல்லாமல் தண்டிக்கும் தலைமை 

7. மற்றும்  தேர்தல் வாக்குறுதிகள் , விஷன்  2023. 

இவற்றை எல்லாம் முன்னெடுத்து புதிய பொது செயலாளரும் , தமிழக முதல்வரும் செயல்படுவார்கள் .அப்படி செயல்பட்டால்  அதிமுக. என்னும்  இயக்கம்  இன்னும்  நூறாண்டுகள் வாழும் .

தலைவர்கள் மறையலாம் , ஆனால் கொள்கைகள்,செயல்  திட்டங்கள் முன்னெடுக்கபடும் போது புதிய  தலைவர்கள்  தோன்றுவார்கள்.





2 கருத்துகள்:

  1. தியாக செம்மல், அமைதியின் மாரு உருவம், நாடாளும் சிங்கம் எங்கள் புரட்சி தோழி சின்ன அம்மா சசிகலா அவர்களை ....நாங்கள் ஒரு குவாட்டர் + ஒரு பிரியாணி + 2000 ரூபாய் (புது நோட்டு தான்) வாங்கிக்கொண்டு நிரந்தர முதல்வர்-ஆக்க போகிறோம் .. ஏன் நாங்க வருங்கால பிரதமர் .. மன்னிக்கவும் .. வருங்கால நிரந்தர பிரதமர் ஆகுவோம்

    பதிலளிநீக்கு
  2. // அழிந்து விடுமா அதிமுக ?//

    ஒரு குவாட்டர் , + ஒரு பிரியாணி + 2000 ரூபாய் (புது நோட்டு தான்) இருக்கும் வரை அதிமுக அழிவே அழியாது ...

    எங்கள் தியாக செம்மல், அமைதியின் மறு உருவம், நாடாளும் சிங்கம் எங்கள் புரட்சி தோழி சின்ன அம்மா சசிகலா அவர்களை ....நாங்கள் ஒரு குவாட்டர் , ஒரு பிரியாணி , 2000 ரூபாய் (புது நோட்டு தான்) வாங்கிக்கொண்டு நிரந்தர முதல்வர்-ஆக்க போகிறோம் .. ஏன் நாங்க வருங்கால பிரதமர் .. மன்னிக்கவும் .. வருங்கால நிரந்தர பிரதமர் ஆகுவோம்

    பதிலளிநீக்கு