புதன், 28 டிசம்பர், 2016

விஜய் யின் சினிமா வெற்றியும் ,அதிமுகவின் அரசியல் வெற்றியும்

1992ம் வருடம், அரவிந்த் ஸ்வாமி,பிரசாந்த்,போன்ற ஆணழகர்கள்   தான் தமிழகத்தின் எதிர்கால  ஸ்டார்கள் என்று எதிர்பார்த்து  இருந்த  நேரம் , ஒரு  பிரபல  இயக்குனர்  தனது மகனை  நடிகராக  அறிமுக படுத்துகிறார்.
 மாநிறமான  முகம் ,மக்களிடம்  எந்த  எதிர்பார்ப்பும்  இல்லை .பிரபல வார பத்திரிக்கை இவரை எல்லாம் யார் நடிக்க சொன்னார்கள் என்று எழுதியது. சிலருக்கு  காரணம் இல்லாமல்  அவர் மீது  வெறுப்பு. மனம் தளராத அந்த  இளைஞர் தனது  முயற்சியை தொடர்ந்தார்  ஏறத்தாழ  3 ஆண்டுகள்  அவருக்கான  நேரம் அமைந்தது.இரண்டு  படங்கள்அவரது வாழக்கையை  புரட்டி  போட்டது .20 ஆண்டுகளுக்கு பிறகு  அவர் தமிழ்  சினிமாவின் வசூல்  சாதனையாளராகவும்,லட்சக்கணக்கான ரசிகர்களின் நாயகனாகவும் விளங்குகிறார்.அன்று விமர்சித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியவில்லை.




அந்த  நாயகன்  தான் திரு  விஜய் அவர்கள், அந்த  இரண்டு  படங்கள் பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை .எந்த  வித எதிர்பார்ப்பும் இல்லாமல் , தேவையற்ற வெறுப்பையும் பொருட்படுத்தாமல் , முயற்சியில் மனம் தளராதால் அவர் இன்று திரைத்துறையில்   உயரத்தை  அடைந்துள்ளார்.

அதே போல் அண்ணா  திமுகவின் எதிர்கால தலைமை யார் ஏற்றாலும் , கட்சி அழிந்து விட வில்லையே என்ற   எரிச்சலையும்  , வெறுப்பையும் எதிரிகள் காட்டுவார்கள். ஒரு  திரை பிரபலம் இல்லாத ஒருவரிடம் மக்களின்   பெரிய  எதிர்பார்பும்  இல்லை ஆனாலும் 4.5 ஆண்டுகள் ஒரு சிறந்த ஆட்சியை  கொடுப்பதன்  மூலம் மக்கள் சக்தியை  எளிதில் பெற  முடியும்.

பிறப்பால்  ஆன  தலைவர்களை  விட உழைப்பால் ஆன  தலைவர்கள் சாதித்தது  அதிகம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக