வியாழன், 17 ஆகஸ்ட், 2017

காவியில் கரையாது கழகம்..

கட்சியை  ஒன்றிணைக்க  யாரிடம்  போய்  நிற்கிறீர்கள் ....
 அவர்கள்  எந்த விதத்தில்  இந்த  இயக்கத்துடன்  தொடர்புடையவர்கள்  ..

நீங்கள்  யார் இந்த  இயக்கத்தை  இணைக்க  பேச்சு வார்த்தை  நடத்த ?

புரட்சி  தலைவருடன்  திமுக விலிருந்து  பிரிந்து  வந்தவர்களா ?

திண்டுக்கல்  இடை  தேர்தலில் மாய  தேவரின்  வெற்றிக்கு  புரட்சி தலைவருடன்  பணியாற்றியவரா ?
'
புரட்சி  தலைவரின்  அமைச்சரவையில்  இருந்தவர்களா ?

புரட்சி  தலைவி  சேவல்   சின்னத்தில்  போட்டியிட்ட  போது  ஆதரித்தவரா ?

புரட்சி  தலைவி  சட்ட  மன்றத்தில்  தாக்க பட்ட போது  காத்து   நின்றவரா ?

 இரட்டை  இலையை  மீட்டேடுத்து , மருங்காபுரி , மதுரை  தொகுதி  இடைதேர்தலில்  களம்  இறங்கியபோது துணை  நின்றவரா ?

புரட்சி  தலைவி  ஆளும்  பொழுதும் , எதிர்க்கட்சியாக  இருக்கும்  பொழுதும்  துணை  நின்ற  சட்டமன்ற  உறுப்பினரா  இல்லை  மாவட்ட  கழக  செயலாளரா ?

பொய்  வழக்குகளை  போட்டு  புரட்சி  தலைவி  சிறை  சென்ற  போது  உடன்  சென்றவரா ?
திமுக  ஆட்சியை  எதிர்த்து  அதிமுக போராடிய  போது  கழகத்துக்காக சிறை  சென்றவரா ?

அண்ணா  திராவிட  முன்னேற்ற  கழகத்தில் , அண்ணாவை  பற்றி உங்களுக்கு ஏதாவது  தெரியுமா  இல்லை  திராவிடம்  பற்றி  தான்  தெரியுமா ?

 தமிழகத்தின்  மீது  அக்கறையில்  என்றால் , தமிழர்களின்  வரலாறு  தெரியுமா ? சோழர் , சேரர்  பாண்டியரின் வீரம்  பற்றி தெரியுமா ?

தமிழகத்தின்  வாழ்வாதார  பிரச்சினைகளான  காவேரி , முல்லை  பெரியார்  போன்றவை   பற்றித்தான்  தெரியுமா ?

யாருக்கும்  இல்லாத  அக்கறை  உங்களுக்கு  ஏன்  வந்தது ?

 உங்களுக்கு  தெரிந்தது  39 நாடாளுமன்ற  உறுப்பினர்கள் , 234 சட்டமன்ற  உறுப்பினர்கள் , மாட்டுக்கறி , விநாயகர்  ஊர்வலம் , பிரியாணி  குண்டாண் அவளவுதான்.

உங்களுக்கு  அமைச்சர்கள் ,நாடாளு  மன்ற  உறுப்பினர்கள் ,சட்ட மன்ற  உறுப்பினர்கள் , சில  நிர்வாகிகள்  கட்டுப்படலாம் புரட்சி  தலைவர் மற்றும்  புரட்சி  தலைவியின்   உண்மை  தொண்டர்கள் என்றும் கட்டுப்பட  மாட்டார்கள் ...

அடுக்குமறைக்கு அஞ்சாத  தலைவனே  தேவை ...மண்டியிட்டு மன்னிப்பு  கேட்பவர் அல்ல....எங்களின்  தலைவரை  நாங்கள்  தேர்ந்தெடுப்போம் ..
தமிழக  வரலாற்றில்  வேலூர்  புரட்சியை  போல்  , மேலூர்  எழுச்சிக்கும் இடம்  கிடைக்கும் ..

காவியில்  கரையாது கழகம்..


 ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக