வியாழன், 19 மே, 2016

அதிமுக வெற்றி.. எதிர்பாராததா? காரணங்கள் சில

அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது.. இந்த முடிவு எனது மே 9 மற்றும் ஏப்ரல் 13 தேதி பதிவுகளை ஒட்டியே அமைந்துள்ளது...
வெற்றி
காரணம் 1  :,
அதிமுக தனது வாக்கு வங்கியான ஏழை மற்றும் கீழ் நடுத்தர வாக்கு வங்கியையும், கிராமப்புற மற்றும் மேற்கு மண்டல வாக்கு வங்கியையும் , பெண்கள் வாக்கையும் தக்க வைத்து கொண்டு உள்ளது..அதிருப்தி நகர்புறங்களிலும், உயர் நடுத்தர வகுப்பு பகுதியிலும் இருந்தாலும் அவை ஆட்சி மாற்றம் அளவுக்கு வலுவாக  இல்லை

காரணம் 2
 அதிமுக அதிருப்தி இருந்தாலும் , அது திமுக வாக்காக மாறவில்லை.. மக்கள் இன்னும்  திமுகவை முழுமையாக மன்னிக்க தயராகவில்லை

காரணம் 3
 திமுகவின்  மீடியா பலத்தினால் மந கூ வை பலவின படுத்த முடிந்ததே தவிர , அரசுக்கு  எதிரான  வாக்குகள் பா ம க, பிஜேபி, NTK,  போன்றவை சிறிதளவு பிரிக் க செய்துள்ளது..

காரணம்  4
கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்பது புதிய தலைமுறை வாக்காளர்களை கவரவில்லை... சமுக வலை தளங்கள்  வாக்கnளர்களை அடைய ஒரு வழியே அன்றி அது வெற்றியை தீர்மானிக்கும்  சக்தியாக இன்னும் மாறவில்லை... தேமுதிக வந்தால் வெற்றி என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்ற திமுக ,  திரும்ப  அந்த பிம்பத்தில் தானே சிக்கியது

காரணம். 5
விலையில்லா பொருட் களுக்கு சமுக வலைதளத்தில் தான்  எதிர்ப்பு இருந்தது.. சாதரன மக்கள் இன்னும்  வரவேற்கத்தான் செய்கிறார்கள்
 இதையும் மீறி  காசு கொடுத்து ஒரு சில தொகுதியில்  வேண்டுமானால் ஜெயிக்கலாம் ..திமுகவிடம் மட்டும் காசு இல்லையா  என்ன?-

மக்கள் தீர்ப்பை மதிப்போம் ... நல் லாட்சியை எதிர் பார்போம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக