செவ்வாய், 31 மே, 2016

எங்கே விழ்ந்தது முன்றாவது அணி ?

எங்கே விழ்ந்தது  முன்றாவது அணி ?



மிகவும் எதிர் பார்க்க பட்ட  மக்கள் நல  கூட்டணி +தேமுதிக +தாமா கா  அணி  6 % வாக்குகளை மட்டும் பெற்று ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை ..
வெற்றி  பெற  மாட்டார்கள்  என்றாலும் , சில  தொகுதிகளும் , 10% மேற்பட்ட  வாக்கும்  பெறுவார்கள்  என்ற  நிலையில் , ஏன்  இப்படி  ஒரு  அவமானகரமான  தோல்வி  அடைய  நேர்ந்தது . 

காசு கொடுக்காததினால் தோல்வி அடைந்தோம்  என்று தங்களை  தாங்களே  தேற்றி  கொண்டாலும் ,  உண்மையான  காரணங்களை  ஆராய  வேண்டும் . 

காரணம் -1,

படித்த  வாக்களர்களை  இவர்களால்  தி மு கா  மற்றும்  அதிமுக வுக்கு மாற்று  என்று  நம்ப வைக்க  முடியவில்லை . தி மு கா தனது  ஊடக  பலத்தை  வைத்து  ஏறக்குறைய  அதிமுக  B  டீம்  என்ற  பிரச்சாரத்தை  நம்ப வைத்து  விட்டது 

காரணம்  2
விஜயகாந்த  மற்றும்  வாசன்  போன்றவர்களின்   சந்தர்பவாத  அரசியல் .கடைசி  நேரம்  வரை  அணைவரிடமும்  பேச்சு வார்த்தை  நடத்தி  விட்டு கடைசியில்  மக்கள்  நல கூட்டணி யில்  இணைந்தது  மக்களிடம்  எடுபட வில்லை .. தெரியாத  பிசாசை  விட  தெரிந்த  பேயே மேல்  என்று  மீண்டும் மக்கள்  தி மு கா  மற்றும்  ஆ தி மு  க விற்கே    வாக்களி தனர்.

 காரணம் -3
விஜயகாந்தின்  செயல் பாடுகள் .எதிர் கட்சி  தலைவராக கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டு  கடைசி நேரத்தில் மக்கள் மத்தியில் தோன்றி வாக்கு  கேட்டாலும் மக்கள்  பொருட்படுத்தவில்லை .

அரசியலில்  நீங்கள் வில்லனாக  இருக்கலாம் , ஹீரோ வாக இருக்கலாம்  ஆனால்  காமெடி யனாக  இருந்தால் மக்கள்  எளிதில்  புறக்கணிப்பார்கள் .

காரணம் -4 

வாக்கு சதவிதம்  குறைவு .நகர்ப்புறங்களில் இரண்டு  திராவிட கட்சிகளிடமும்  பிடிப்பு இல்லாத வாக்காளர்களை இவர்களும் ஈர்க்க தவறினர். 

காரணம் -5
மக்கள்  நல  கூட்டணி  என்ற  பெயரில்  இணைய மறுத்து அதில்  தேமுதிக , தா மா  கா  என்று  சேர்த்தவர்கள்  எப்படி  ஒற்றுமையாக ஆட்சி  செய்வார்கள் 

அடுத்த  முறை  மாற்று அரசியலை  முன்னெடுத்து  5 ஆண்டுகள் சென்றால் அடுத்த  முறை  ஓரளவு  அங்கிகாரம்  கிடைக்க  வாய்ப்பு உள்ளது ..







2 கருத்துகள்:

  1. மக்கள் நலக்கூட்டணி முதன் முதலில் வெளிப்பட்ட போது மக்களின் நன்மதிப்பையும் எதிர்பார்ப்பையும் ஆதரவைப்பெறும் தகுதியும் பெற்றிருந்தது உண்மைதான். ஆனால் இந்த நிலை கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களின் போது சரிய ஆரம்பித்தது.
    1. முதல்வர் வேட்பாளர் இல்லை என்கின்ற நிலை மாறி விஜயகாந்த் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது.
    2. அ.தி.மு.க. விடம் இறுதிவரை பேரம் பேசி படியாததால் இந்தக் கூட்டணிக்கு வந்த வாசனை ஏற்றுக்கொண்டது.
    3. விஜய்காந்த் மற்றும் அவர் மனைவி மைத்துனர் ஆகியோரது தகுதியற்ற பேச்சு.
    4. வைகோ அவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் எற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மாறிப்போனபோது

    முடிவில் இக்கூட்டணி மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்தது.



    பதிலளிநீக்கு